Karur Vysya Bank | தேர்வு இல்லை.. நேர்காணல் மட்டுமே... பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வாய்ப்பு..
தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்த பிறகு அவர்களுக்கு நேர்காணல் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் கரூரை மையமாகக்கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கி தான் கரூர் வைஸ்யா வங்கி. தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டுவரும் இவ்வங்கியில் பணிபுரிவதற்கு அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் தற்போது business development associate பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Business development associtate பணிக்கான தகுதிகள்:
கரூர் வைஸ்யா வங்கியில் Business development associtate ஆக பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதாவது ஒரு இளங்கலை பட்டயப்படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொலைத்தூர கல்வியில் படித்தவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான திறன் கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகள் இந்த வேலைக்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.karurvysyabank.co.in என்ற இணையதளப்பக்கத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் விண்ணப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்தப் பிறகு அவர்களுக்கு நேர்காணல் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வும் இல்லை என்பதால் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து இப்பணிக்கு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணலுக்கான தேதி மற்றும் இடம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
மாத வருமானம் : கரூர் வைஸ்யா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் business development associate ஆக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 18 ஆயிரம் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணி குறித்த கூடுதல் விபரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2021/08/25180551/KVB-Recruitment.pdf என்ற இணையதளப்பக்கத்தில் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.