IIT Madras Recruitment:டிகிரி முடித்தவரா?ஐ.ஐ.டி.யில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி!
IIT Madras Recruitment:சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள நிர்வாக உதவியாள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளையே (10.04.2024) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிர்வாக உதவியாளர்
கல்வித் தகுதி:
- பொறியியல் வடிவமைப்பு துறையிலுள்ள ‘Centre of Excellence for Zero Emission Trucking (CoEZET)’ -ல் பணிபுரிய வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% அல்லது 6 CGPA மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
- கணினி பயன்படுத்த, ஆங்கிலம் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.25,000/- வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://recruit.iitm.ac.in/ - என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள- recruit@iitm.ac.in
தொலைப்பேசி எண்கள் - 044 2257 9778 / 9796
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.04.2024 மாலை 05.30 மணி வரை
இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Administrative%20Assistant%20-Advt%20-%2053%20-%202024..pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க.
CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்