IDBI SCO Recruitment: விண்ணப்பித்து விட்டீர்களா? நாளையே கடைசி! பிரபல வங்கியில் வேலை; முழு விவரம்!
IDBI SCO Recruitment: பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன்மூலம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்
உதவி மேலாளர்
மொத்த பணியிடங்கள் - 600 (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.)
கல்வித்தகுதி:
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் வங்கி பணி, காப்பீட்டு துறை உள்ளிட்டவற்றில் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
முதலில் https://www.idbibank.in/pdf/careers/Final-Detailed-Advertisement-AM-2023-24.pdf -என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
https://www.idbibank.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
“Recruitment of AssistantManager- 2023-24 ” பக்கத்திற்கு செல்லவும்.
“APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Final-Detailed-Advertisement-AM-2023-24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2023
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 16,ஏப்ரல்,2023
மேலும் வாசிக்க..
TNPL Recruitment : ரூ. 31,500 மாத ஊதியம்; அரசுப் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!