Bachlor degree இருக்கா? பாங்க் ஆப் பரோடாவில் மேலாளர் ஆகலாம்.. மார்ச் 7க்குள் விண்ணப்பிக்கலாம்!
வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி துணை தலைவர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda) என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி துணை தலைவர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை என்ன? தேர்வு செய்யும் நடைமுறை போன்றவை குறித்து இங்கே முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.
பாங்க் ஆப் பரோடா வங்கிப்பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிட விபரங்கள்:
உதவி துணை தலைவர் (Assistant Vice president) – 3
வயது வரம்பு – இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முதுநிலை மேலாளர்(senior Manager) – 3
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 25-37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலாளர் ( Manager) -3
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி:
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 8 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக பிஇ, பிடெக், எம்சிஏ மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://www.bankofbaroda.in/career என்ற வங்கி இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் அப்பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூபாய் 100ம், மற்ற பிரிவினருக்கு ரூ. 600 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – மார்ச் 7, 2022
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்:
தேர்வாகும் நபர்களின் பணிக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.bankofbaroda.in/career.htm என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக தெரிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.