(Source: ECI/ABP News/ABP Majha)
DRDOவில் 150 அப்ரண்டிஸ்கான அறிவிப்பு.. பட்டதாரிகள் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்!
DRDO அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் முதலில் சரிபார்க்கப்படும். இதனையடுத்து எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (DRDO) 150 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (DRDO), தனது ரிசர்ச் சென்டர் ஜமரத்திற்கான பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதல் பட்டதாரி நிலை அப்ரண்டிஸ், டிப்ளமோ நிலை தொழில்நுட்ப அப்ரண்டிஸ் மற்றும் வர்த்தக அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி. எனவே யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
DRDO அப்ரண்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 150
இதில் 40 இடங்கள் கிராஜூவேட் லெவல் அப்ரண்டிஸ், 60 இடங்கள் டெக்னீசியன் அப்ரண்டிஸ், 50 இடங்கள் டிரேட் அப்ரண்டிஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடந்த ஜனவரி 1, 2022 அன்று 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி:
கிராஜூவேட் லெவல் அப்ரண்டிஸ்: இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ECE, EEE,CSE, Mechanical, Chemical ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக் அல்லது பி.காம், பி.எஸ்.சி முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் அப்ரண்டிஸ்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ECE, EEE,CSE, Mechanical, Chemical ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டிரேட் அப்ரண்டிஸ்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் மற்றும் வெல்டர் ஆகிய பாடங்களில் ஐடிஐ யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் https://rcilab.in/SitePages/Home.aspx என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இப்பக்கத்தில் Engagement of Apprentices 2021-22 என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து வரும் என்ஏபிஎஸ் (NAPS) போர்டலில் உங்களது ரிஜிஸ்டர் நம்பரை உள்ளிட்டு மொபைல் எண் மற்றம் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனை பதிவு செய்து முடித்ததும், முந்தைய பக்கத்திற்குச் சென்று அப்ளை ஹியர் (apply here) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் விண்ணப்பித்தை அணுக வேண்டும் என்றால் உங்கள் ரிஜிஸ்டர் எண் மற்றும் தொலைப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனையடுத்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக நிரப்பிக்கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DRDO அறிவிப்பின் படி, ஆவணங்கள் முதலில் சரிபார்க்கப்படும். இதனையடுத்து எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://rcilab.in/EngagmentApprentice/Pages/ApprenticeIndex.aspx என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாகத் தெரிந்துக்கொள்வோம்.