இன்னும் ஆசை.. இன்னும் ஆர்வம்.. செக்ஸில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!!
பார்ட்னர்கள் எப்போதும் தங்கள் பாலியல் தேவைகள், கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான தம்பதிகள் செக்ஸில் பாலியல் நெருக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. தம்பதிகளிடையே உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மிக முக்கியத் தேவையாகக் கருதப்பட்டாலும், செக்ஸுவல் ஆரோக்கியமும் சரிசமமாக முக்கியமானது. பார்ட்னர்கள் எப்போதும் தங்கள் பாலியல் தேவைகள், கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான பாலியல் நெருக்கத்துக்கு பார்ட்னர்கள் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களை கீழே பகிர்கிறோம்.
செக்ஸ் என்பது படுக்கையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றியது. ஆனால் அது என்னவென்கிற புரிதல் உங்கள் துணைக்குத் தெரியவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். அதனால் படுக்கையில் உங்களை உற்சாகப்படுத்துவது எது என்பதை ஒருவருக்கொருவர் தெளிவுபடுத்துங்கள். உங்கள் ஆசைகள் மற்றும் கற்பனைகளை நீங்கள் ஒருவருக்கொருவர் தெரிவிக்கும்போது, செக்ஸ் தானாகவே கவர்ச்சியானதாக மாறும்!
உடலுறவின் போது சிறப்பாக செயல்படுவது அல்லது அழகாக இருப்பது குறித்து உங்கள் பார்ட்னருக்கு அழுத்தம் கொடுப்பது செக்ஸை சுவாரசியமாக்கது. அது உங்களை உறவிலிருந்து தனிமைப்படுத்தும். உடலுறவில் உங்கள் பங்கு என்ன என்பதை உணர்ந்து ஈடுபடுங்கள், செக்ஸ் பாசிட்டிவ்வாக இருங்கள். உங்கள் உடலுடனும் அது ஏற்படுத்தும் சிற்றின்பத்துடன் இணைந்திருங்கள், இதனால் உங்கள் பார்ட்னரும் உடலுறவை விரும்புவார்.
பெரும்பாலும், பரபரப்பான வாழ்க்கையின் சலசலப்புகளுக்கு மத்தியில், தம்பதிகள் படுக்கையில் ஒன்றாக நேரத்தை செலவிட மறந்துவிடுகிறார்கள் அல்லது அவ்வாறு ஈடுபடுவதற்கு அவர்களது சோர்வு இடம் கொடுப்பதில்லை. ஆனால், அத்தகைய நெருக்கமான நேரத்திற்கு முன்னுரிமை கொடுப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 'ஐ லவ் யூ' என்று சொல்வது போல் அரவணைப்பது அல்லது உடலுறவு கொள்வது ஏன் முக்கியம் என்பதை இது உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் கற்பிக்கும்.
முக்கியமக உடலுறவில் க்ளைமாக்ஸுக்கு அவசரப்பட வேண்டாம். அது செக்ஸை சுவாரசியமாக்காது. மெதுவாக செல்லுங்கள். உடலுறவுக்கு முன்பான ஃபோர்பிளேயை முயற்சிக்கவும், ஏனெனில் அது கூடுதல் சிற்றின்பத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். ஆசை மற்றும் சிற்றின்பத்தை வெளிப்படுத்தும் உடலின் முக்கியமான பகுதிகளை நீங்கள் கண்டறிந்து கவனம் செலுத்தினால், உங்கள் பார்ட்னரும் அதனை விரும்புவார். அதனால் உடலுறவில் ஒருபோதும் அவசரப்பட வேண்டாம்
உங்கள் பார்ட்னர் போதுமான அளவு உடலுறவில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நீங்கள் சமீபத்தில் கவனித்தீர்கள் ஆனால் ஒருவேளை, அவர்கள் அதில் ஈடுபடும் மனநிலையில் இல்லை, அல்லது நீங்கள் தொடங்குவதற்காக அவர்கள் காத்திருக்கலாம். உடலுறவின் போது அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள் இருக்கலாம் ஆனால் அதனால் மனம் உடைய வேண்டாம். உடலுறவு அல்லது உங்கள் பார்ட்னரை அரவணைத்துக் கொள்வதற்கான நேரத்தை நீங்களே தொடங்கலாம். அவர்கள்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )