சிகரெட் பிடிக்குறவங்கவங்களுக்கு மட்டுமல்ல; பக்கத்துல நின்றாலே கேன்சர் கன்ஃபார்ம்! ஆய்வு சொல்வது என்ன?
தி லான்செட் என்ற நிறுவனம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, புற்றுநோய்க்கான 10வது பொதுவான ஆபத்து காரணியாக இது உள்ளது என்று கூறுகிறது.
புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் இருந்து சுவாசிக்கும் புகை எந்த அளவுக்கு ஆபத்தானது என்று ஒரு ஆய்வு பகீர் தகவல்களை வெளியிட்டு உள்ளது.
பொது இடங்களில் புகைபிடித்தல்
பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று பல காலங்களாகவே அறிவுறுத்தப் பட்டு வருகிறது. பல நாடுகள் அதனை ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடித்து வந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் இதுவரை அதற்கு சாத்தியம் குறைவாகவே இருந்து வருகிறது. அதனால் குழந்தைகள் மற்றும் புகைப்பிடிக்காத ஆண்கள், பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
அதன் வீரியம் என்ன?
புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்களின் அருகாமையில் இருப்பவர்களும் அந்தப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அதன் வீரியம் என்னவென்று நாம் அறிந்ததில்லை. ஆனால் தற்போது அதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வு தரும் அதிர்ச்சி
தி லான்செட் என்ற நிறுவனம் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, புற்றுநோய்க்கான 10வது பொதுவான ஆபத்து காரணியாக இது உள்ளது என்று கூறுகிறது. புகைபிடிக்காதவர்கள், வீட்டிலோ அல்லது வேலையிலோ, அல்லது பொது இடத்திலோ செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிற்கு ஆளாகிறார்கள்.
என்ன சொல்கிறது ஆய்வு?
இந்த வகை புகை நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 20% முதல் 30% வரை அதிகரிக்கும்,” என்று CDC கூறுகிறது. செகண்ட் ஹேண்ட் ஸ்மோக் என்று கூறப்படும் இது, சிகரெட்டின் எரியும் முனையிலிருந்து வரும் புகை மற்றும் புகைப்பிடிப்பவர்கள் சுவாசித்து வெளியில் விடும் புகை ஆகியவற்றின் கலவையாகும். அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, சீக்ரெட்டால் ஏற்படும் புகையில் 7000 க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன, அவற்றில் நூற்றுக்கணக்கானவை நச்சுத்தன்மையும் சுமார் 70 புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )