மேலும் அறிய

10 நாட்கள் பாகற்காய் ஜூஸ்.. உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.. என்னென்ன தெரியுமா?

பாகற்காய் சாறு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என சொல்லலாம். பாகற்காய் உடலில் சர்க்கரையை மிக விரைவாக ஜீரணிக்கச் செய்யக்கூடியது.

காய்கறிகளில் பாகற்காய் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பதை நாம் அறிவோம். அதனை கண்டாலே பலரும் பல அடி தூரம் ஓடி விடுவார்கள். மாறிவரும் உணவுப் பழக்கத்தால் வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கடுமையாக நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை தேடி பலரும் அலைகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பாகற்காயை எடுத்துக் கொள்ளலாம்.  தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு தினமும் காலையில் பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

கசப்பு சுவை காரணமாக பலர் பாகற்காயை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இது உடலில் இருந்து பல நோய்களை நீக்கும் ஒரு பானம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாகற்காய் ஜூஸில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரோபயாடிக்குகள் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன.  இதனை குடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என்பது பற்றிக் காணலாம். 

பாகற்காய் சாறு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என சொல்லலாம். பாகற்காய் உடலில் சர்க்கரையை மிக விரைவாக ஜீரணிக்கச் செய்யக்கூடியது. கல்லீரல் சுத்திகரிப்பு மற்றும் வலுவான செரிமானத்திற்கு பாகற்காய் சாறு மிகவும் கைகொடுக்கிறது. உடலில் இருந்து அனைத்து நச்சு மற்றும் பயனற்ற கழிவுகளையும் நீக்கி இது செரிமான அமைப்பை மிகவும் வலிமையாக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனை நிரந்தரமாக சரி செய்யப்படுகிறது.

இது உடலுக்குள் இருந்து இரத்தத்தை சுத்திகரிப்பதால் சருமத்தில்  இயற்கையான பளபளப்பு வேண்டுமென்றால் இதை எடுத்துக் கொள்ளலாம். இதன் நேரடி பலனை நாம் கண்கூடாக பார்க்கலாம். தொடர்ந்து 10 நாட்கள் குடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும். உங்களுக்கு ஏதேனும் தோல் பாதிப்பு  இருந்தால் அதற்கு பாகற்காய் நிவாரணம் கிடைக்கிறது. 

உடல் எடையைக் குறைப்பவர்கள், டயட்டை கடுமையாக பின்பற்றுபவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பாகற்காய் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றைச் சுற்றி குவிந்துள்ள தேவையற்ற கொழுப்பு விரைவாக கரைக்கிறது. வயிற்றுப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு  இது அருமருந்தாகும்.

இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட, பயனற்ற கொழுப்புகளை நீக்குவதற்கு பாகற்காய் ஜூஸ் உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தை முற்றிலுமாக குறைக்கிறது. இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிப்பது சிறந்தது. காலையில் பல் துலக்கிய பிறகு வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் முழுவதுமாக குடிப்பதற்கு பதில் கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரிக்கலாம்.

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எது கெத்து... போதை பழக்கத்தில் சிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள் !
எது கெத்து... போதை பழக்கத்தில் சிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள் !
Apollo: இந்தியாவிலே முதன்முறை! அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையில் வெற்றி கண்ட அபோலோ!
Apollo: இந்தியாவிலே முதன்முறை! அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையில் வெற்றி கண்ட அபோலோ!
பப்பாளி விதைகளை தூக்கி எறிகிறீர்களா? - தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சிகரமான நன்மைகள்
பப்பாளி விதைகளை தூக்கி எறிகிறீர்களா? - தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சிகரமான நன்மைகள்
அடிக்கடி கொட்டாவி விடுவது ஆபத்தின் அறிகுறியா? அலட்சியம் வேண்டாம்! காரணங்கள், அறிகுறிகள் & தீர்வுகள்
அடிக்கடி கொட்டாவி விடுவது ஆபத்தின் அறிகுறியா? அலட்சியம் வேண்டாம்! காரணங்கள், அறிகுறிகள் & தீர்வுகள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget