ஆண்களின் கவனத்திற்கு... ஆணுறுப்பை சுத்தம் செய்வது எப்படி? - மருத்துவர் அட்வைஸ்
தினமும் குளிக்கும்போது ஆணுறுப்பை அவசரம் அவசரமாகக் கழுவுவதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் அது முழுதாக உறுப்பை சுத்தப்படுத்துவதில்லை என்கிறார் பாலியல் நிபுணர் மருத்துவர் க்யூட்ரஸ்
ஒரு சில விஷயங்கள் கேட்பதற்கு மிக எளிதாக இருக்கலாம். ஆனால் சற்று தீர ஆய்வு செய்தால்தான் நாம் அதில் தவறவிடும் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும்.அப்படியான விஷயம்தான் ஆணுறுப்பை சுத்தமாக வைத்திருப்பது. தினமும் குளிக்கும்போது ஆணுறுப்பை அவசரம் அவசரமாகக் கழுவுவதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் அது முழுதாக உறுப்பை சுத்தப்படுத்துவதில்லை என்கிறார் பாலியல் நிபுணர் மருத்துவர் க்யூட்ரஸ்
சுத்தப்படுத்த அவர் சொல்லும் வழிமுறைகள்:
ஆணுறுப்புகளைச் சுத்தப்படுத்துவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. சில மதங்களில் ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் வழக்கம் உள்ளது அப்படி மேல் தோல் நீக்கப்பட்ட ஆணுறுப்புகளைச் சுத்தம் செய்வது ஒருவகை. மற்றது தோல் நீக்கப்படாத எல்லோருக்கும் இருப்பது போன்ற ஆணுறுப்பு. மேலே மூடிய தோல் நீக்கப்பட்ட ஆணுறுப்புக்கு சாதாரண சோப் கொண்டு கழுவுவதே போதுமானது.
சோப்பை இரண்டு கைகளிலும் எடுத்து நன்கு குழைத்து உறுப்பு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும்.
இதில் அவ்வளவாக சிக்கல் எதுவும் இல்லை.
இதுவே மேல் தோல் நீக்கப்படாத ஆணுறுப்பை பார்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் தோல் மற்றும் உறுப்பு நுணியின் இடுக்குகளில் ஈரப்பதம் அதிகம் சேரும் வாய்ப்பு உள்ளது. அந்த நேரங்களில் அதில்
பாக்டீரியா மற்றும் இதர கிருமிகள் அதிகம் சேரலாம். அதனால் மேல் தோல் மூடப்பட்ட உறுப்புகளைச் சற்று கவனமாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
சுத்தம் செய்வதற்கான சோப்களை பார்த்து கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அதிக வாசனை தரும் சோப்கள் அல்லது வாஷ்களைத் தவிர்ப்பது நல்லது. உறுப்புகள் வாசனையாக புத்துணர்வுடன் இருக்கும் என்றாலும் அது போன்ற வாஷ்களில் இருக்கும் ரசாயனங்கள் சருமத்துக்கு மிகவும் சென்ஸிட்டிவ்வானது. அது உங்களுக்கோ அல்லது உங்கள் பார்ட்னரின் சருமத்துக்கோ எரிச்சலைத் தரலாம். அதுபோன்ற வாஷ்களைத் தவிர்ப்பது நல்லது.
மேல் தோல் மூடப்பட்ட ஆணுறுப்புகளை கழுவும்போது மேல் தோல் இடுக்குகளில் அழுக்குகள் நீங்க சுத்தம் செய்ய வேண்டும்.ஈரம் சேராமல் பார்த்துக்கொள்ள துணிகளால் நன்கு துடைக்க வேண்டும். அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்யும் துணிகளை டெட்டால் அல்லது சாவ்லான் போன்ற லிக்வுட்கள் கொண்டு நன்கு துவைத்து வெயிலில் படும்படி உலர்த்துதல் அவசியம்.
இது போல பெண்ணுறுப்பை சுத்தம் செய்வது குறித்துத் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்
View this post on Instagram
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )