ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் பயன்படுத்தலாம்...! வல்லுநர்கள் சொல்வது என்ன?
ஒருநாளைக்கு நமது கொழுப்புச்சத்து நுகர்வு எண்ணெய்யை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. நாம் பலதரப்பட்ட கொழுப்புகளை ஒரு நாளில் எடுத்துக்கொள்கிறோம்.
இந்திய உணவுகளைப் பொறுத்தவரை, எண்ணெய் இல்லையேல் அவை இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய் ஒருவர் எடுத்துக்கொள்ளலாம்? எங்கு திரும்பினும் பஜ்ஜி, ஃரை, பொரியல் என்று இருக்கும் ஊரில் இந்த கேள்வியைக் கேட்பது அவசியம் ஆகிறது. இதயக் கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பு போன்ற உடல்நிலைப் பிரச்சனைகளை சமாளிக்க நமது எண்ணெய் அளவை நாம் கண்காணிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, வளர்ந்த நபர் ஒருவர் எவ்வளவு எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம்?
எவ்வளவு துளி எண்ணெய் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது? நான்கு டீஸ்பூன் அளவு என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது இருபது கிராம் அளவு எண்ணெய். வளர்ந்த நபர் ஒருவர் இந்தளவு எண்ணெய் பயன்படுத்தினால் போதுமானது. அதற்கு மேல் போகும்போது, கொழுப்பு உயர்வு, மன அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
முழுதாக எண்ணெய்யை விட்டுவிடலாமா? அதுவும் நன்மை பயக்காது. சிறிது அளவு எண்ணெய் எடுத்துக்கொள்வது உடலுக்கு அவசியம். உடல் எடை இழக்கத் தீவிரமாகப் பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். ஆயினும், இந்த அளவு வளர்ந்த நபர்களுக்கு மட்டும்தான். ஒன்பது வயதிற்குக் கீழிருக்கும் குழந்தைகள் ஒரு டீஸ்பூனை விட அதிகம் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏன் நான்கு டீஸ்பூன் என்று அளவு இருக்கிறது? ஏனெனில், ஒருநாளைக்கு நமது கொழுப்புச்சத்து நுகர்வு எண்ணெய்யை மட்டும் சார்ந்து இருப்பதில்லை. நாம் பலதரப்பட்ட கொழுப்புகளை ஒரு நாளில் எடுத்துக்கொள்கிறோம். உடற்பயிற்சிகள் இன்றி இருப்பதும் நமது ரிஸ்குகளை அதிகரிப்பதில் போய் முடியும். ஆகவே, எண்ணெய் அளவை நான்கு டீஸ்பூனுக்குள் மட்டுப்படுத்துவது நல்லது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )