மேலும் அறிய

புளிக்குப் பதில் குடம்புளி பயன்படுத்தலாமே! ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைகளைக் கேளுங்கள்

தமிழ்நாட்டு சமையல் என்றால் புளி இல்லாமலா? ருசிக்கு புளி என்றால் ருசியும் ஆரோக்கியமும் சேர்த்தே தரும் குடம்புளி எனக் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஜி.கே.தாராஜெயஸ்ரீ BAMS.

தமிழ்நாட்டு சமையல் என்றால் புளி இல்லாமலா? ருசிக்கு புளி என்றால் ருசியும் ஆரோக்கியமும் சேர்த்தே தரும் குடம்புளி எனக் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஜி.கே.தாராஜெயஸ்ரீ BAMS.

குடம்புளி என்பது செடிகளில் விளையும் புளி. பார்ப்பதற்கு பூசணிக்காய் வடிவத்தில் சிறியதாக இருக்கும். இது பழமானதும் காயவைத்து அதன் சதை பகுதியை புளிக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர் கேரள மக்கள். இதன் சுவை மற்றும் வாசனைக்காகவே சமையலில் புளிக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர்.

புளிக்குப் பதில் குடம்புளி பயன்படுத்தலாமே! ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைகளைக் கேளுங்கள்

உடல் எடை குறைப்புக்கு குடம்புளி:

கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்கள். கொள்ளு எப்படி உடல் எடைக் குறைப்பில் உதவுகிறதோ அதே போல் குடம்புளியும் எடைக் குறைப்பில் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிட்டு, பிறகு அதை குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வர எடை குறையும். ஆனால், ஆயுர்வேதமாகட்டும் இல்லை வேறு எந்த மருத்துவமும் ஆகட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டாம்.  

குடலுக்கு நன்மைகள் ஏராளம்:
பொதுவாக அல்சர் போன்ற குடல் புண் நோய் உள்ளவர்களை புளி சேர்க்க வேண்டாம் எனக் கூறுவார்கள். ஆனால் குடம்புளி எடுத்துக் கொண்டால் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணக் கோளாறு அகன்று போகிறது. தினமும் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் நோய்கள் கட்டுப்படும். அமிலத்தன்மை குறையும். கோடைக்காலங்களில் இயற்கை பானமாக இவை செயல்படும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் இயற்கை பானங்களில் குடம் புளி பானமும் ஒன்று.

மலச்சிக்கலுக்கு மருந்து:

மலச்சிக்கல் சிலரைப் பாடாய்ப்படுத்தும். அவர்களுக்கு குடம்புளி அருமருந்து. இயற்கையான மலம் இளக்கிகளில் குடம்புளியும் ஒன்று. மலச்சிக்கல் கொண்டிருந்தால் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி கூழ் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

குடம்புளி சாறு குடித்தால் இத்தனை பலனா?

குடம்புளியை சாறாக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் வகைகளை கட்டுப்படுத்த செய்கிறது. மேலும் தீவிரமாகாமல் தடுக்கிறது. குடம்புளி சாறு குடிப்பது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு குடம்புளி:
குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து அதிகரிக்க இவை பயன்படுத்தலாம். சருமப் பொலிவுக்கும் குடம்புளி உதவுகிறது. கேச பளபளப்பிற்கும் குடம்புளி உதவுகிறது. உதட்டு வெடிப்பு நீங்க குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget