Coffee : ஒரு நாளைக்கு 4 கப் குடிச்சா இப்படி நடக்கும்னு சொல்றாங்க மக்களே.. காபி காதலர்கள் கவனத்துக்கு..
அன்றாட காஃபி ப்ரேக்குகள் நம் அலுவல் வாழ்வை இலகுவாக்கி வரும் நிலையில், அதிக காபி அருந்துவது தலைவலிக்கு வித்திடுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டீ காதலர்களுக்கு சிறிதும் சளைத்தவர்கள் அல்ல காபி காதலர்கள். இன்றைய பரபரப்பான உலகின் அன்றாடம் கிடைக்கும் சின்ன இடைவெளிகளில் நம்மை மகிழ்வித்து காபி நம்மில் பலரது வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது.
நம் நாளைத் தொடங்க நம்மில் பலருக்கு காலையில் காபி தேவை. காபியில் உள்ள காஃபின் நம் உணர்வுகளை வேகமாக செயல்பட வைக்கிறது. அதனால்தான் பரீட்சையின் போதும், தூக்கம் வரும்போதும், விழித்திருக்கவும் காபியை மக்கள் நாடுகிறார்கள். இருப்பினும், இதற்கு சமமாக காபி அதன் பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடிப்பது தலைவலியை உண்டாக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் காபி எவ்வாறு தலைவலியை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.
காஃபியில் உள்ள வேதிப்பொருளான காஃபின் தான் இந்தத் தலைவலிக்கு காரணமாகிறது. தினமும் 400 மி.கி அல்லது 4 கப் காபி குடிப்பதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, இரண்டு வாரங்களுக்கு மேல் ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் காஃபின் உட்கொள்பவர்களுக்கும் ஒற்றைத் தலைவலி வரலாம்.
இச்செய்தியை படித்து விட்டு காபி குடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என நினைத்தால் அதுவும் பிரச்னை.
திடீரென்று காபியை நிறுத்துவதும் பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே, உங்கள் பழக்கத்தை படிப்படியாக மாற்றவும். இதை நீங்கள் நிர்வகிக்க முடிந்தால், ஒற்றைத் தலைவலி அபாயமும் பெருமளவில் குறையும்.
தலைவலியைத் தவிர்க்க காபியை குறையுங்கள்
காபியில் உள்ள காஃபின் அளவு ஒவ்வொருவரின் உடலிலும் வித்தியாசமாக செயல்படுகிறது. ஆனால் தலைவலி போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, மக்கள் அதிகமாக காபி குடிப்பதைத் தவிர்ப்பது ஒன்றே சிற்ந்த தீர்வு.
ஒற்றைத்தலைவலி பிரச்னையுடன் போராடுபவர்களுக்கு, காபி உட்கொள்வதை குறைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தலைவலி தவிர, அதிகப்படியான காஃபின் காரணமாக பதட்டம், மன அழுத்தம், தூக்கப் பிரச்சனைகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற மற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு அவை இறுதியாக தலைவலிக்கு வழிவகுக்கும்.
காஃபினை விட்டுவிட்டாலும் உங்களுக்கு அதிக பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

