காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்: இதய நோய், நரம்பியல் உட்பட முக்கிய சிகிச்சைகள்! தவறவிடாதீர்!
காரைக்காலில் நடைபெறும் மெகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாமில் இதய நோய், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் நேரடியாகப் பங்கேற்றுச் சிகிச்சையளிக்க உள்ளனர்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட மக்களுக்கான புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுநிலை பயிற்சி நிறுவனத்தின் சார்பில் சிறப்பு நிபுணர்கள் பங்கேற்கும் மாபெரும் மருத்துவ முகாம் வரும் வெள்ளிக்கிழமை (20.02.2026) அன்று நடைபெற உள்ளது. மாவட்டத்தின் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியாக, உயர்தர சிகிச்சைக்காகப் புதுச்சேரி அல்லது சென்னை போன்ற வெளி ஊர்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல், நிபுணத்துவச் சிகிச்சைகளை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு வரும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் சிறப்பான முன்னெடுப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை (IGGGH&PGI), அதிநவீன மருத்துவ வசதிகளுக்கும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களுக்கும் பெயர்பெற்றது. காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் இதய நோய், நரம்பியல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு உயர்தர சிகிச்சை பெறப் பல மைல் தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி அரசு இந்தச் சிறப்பு முகாமிற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த முகாம் குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் J. ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
களமிறங்கும் நான்கு முக்கியத் துறை நிபுணர்கள்
இந்த ஒரு நாள் சிறப்பு முகாமில், நான்கு மிக முக்கியமான மருத்துவத் துறைகளைச் சேர்ந்த முதன்மை நிபுணர்கள் கலந்துகொண்டு நோயாளிகளைப் பரிசோதிக்க உள்ளனர்.
*குழந்தை அறுவை சிகிச்சை (Paediatric Surgery): முதன்மை மருத்துவ அலுவலர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் K. ஸ்ரீராம் பங்கேற்று, குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகள், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோய்கள் குறித்து இவர் ஆலோசனைகளை வழங்கின்றார்.
* நரம்பியல் (Neurology): மூளை, தண்டுவடம் மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் V. தேவி, வலிப்பு, பக்கவாதம் மற்றும் தீவிரத் தலைவலி போன்ற பாதிப்புகளுக்கு இவர் தீர்வு வழங்குவார்.
* இதய நோய் (Cardiology): இதயத் துடிப்புப் பாதிப்பு, மாரடைப்புக்குப் பிந்தையப் பராமரிப்பு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் N. பாலமுருகன் சிகிச்சையளிக்க உள்ளார்.
* சிறுநீரகச் சிகிச்சை (Urology): சிறுநீரகக் கற்கள், புரோஸ்டேட் பிரச்சினைகள் மற்றும் சிறுநீரகப் பாதை தொடர்பான கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்க டாக்டர் ஹரிதேவ்குமார் கலந்துகொள்கிறார்.
பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
இந்த முகாமினை மக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பழைய மருத்துவ ஆவணங்கள்: நோயாளிகள் தாங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்ட ஸ்கேன் ரிப்போர்ட்கள், இரத்தப் பரிசோதனை முடிவுகள் மற்றும் தற்போதைய மருந்துகள் குறித்த பட்டியலைக் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இது மருத்துவர்கள் விரைவாக நோயைக் கண்டறிய உதவும்.
* நேரம்: முகாம் ஒரு நாள் மட்டுமே நடைபெறுவதால், அதிகாலை நேரத்திலேயே மருத்துவமனைக்கு வந்து தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* முன் பதிவு: குறிப்பிட்ட துறைகளில் நாள்பட்ட உபாதைகள் உள்ளவர்களுக்கு இந்த முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்த வாய்ப்பைக் காரைக்கால் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். "உயர்தர சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை காரைக்காலிலேயே கிடைப்பது மாவட்டத்தின் மருத்துவச் சேவையில் ஒரு மைல்கல்" எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
























