Apollo: தமிழகத்திலே முதன்முறை.. லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை - அப்போலோ மருத்துவமனை சாதனை
சென்னை அப்போலோ மருத்துவமனையில் லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே இதுதான் முதன்முறை ஆகும்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனை தமிழ்நாட்டிலே முதன்முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர்:
இதன்மூலம் இதயநோய் அறுவை சிகிச்சையில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை அப்போலோ மருத்துவமனை எட்டியுள்ளது. மிகவும் சிக்கலனா மருத்துவ நடைமுறையை மூத்த இதயநோய் மற்றும் இதயத்துடிப்பு, இதய மின் செயல்பாட்டு நிபுணர் மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்திகேசன் அவரது இதய சிகிச்சைக்குழுவினர் மேற்கொண்டனர்.
லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் அறுவை 80 வயதுடைய ஆண் மருத்துவ பயனாளருக்கு செய்யப்பட்டது. இவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் ஆகியவற்றுடன் நாள்பட்ட நோயினால் டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்ட வந்தது. மேலும், ஏற்கனவே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்வால் உண்டாகும் இதய அடைப்பினால் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக துடிப்பது, அடிக்கடி சுயநினைவை இழப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தன.
அடுத்த தலைமுறை:
வழக்கமான பேஸ்மேக்கர்கள் பொருத்தப்பட்டால் அவருக்கு நோய் தொற்று ஏற்படும் ஆபத்தும் அதிகம் இருக்கும் என்பதால் இத்தகைய மருத்துவ பயனாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட மாற்று சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. இதனால், அதிநவீன மருத்துவ நடைமுறையான லீட்லெஸ் பேஸ்மேக்கர் சிகிச்சை முறையைச் செய்ய அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு முடிவு செய்தது.

ஏவிஇஐஆர் டுயல் சேம்பர் பேஸ்மேக்கர் அடுத்த தலைமுறை கார்டியாக் பேசிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இதய அறுவை சிகிச்சை ஆகும். வழக்கமான பேஸ்மேக்கர் சிகிச்சையில் லீட்ஸ் மற்றும் சர்ஜிக்கல் பாக்கெட் தேவை. ஆனால், இந்த நவீன ஏவிஇஐஆர் டூயல் சேம்பர் பேஸ்மேக்கர் லீட்ஸின் தேவையில்லாமல் குறைந்தபட்ச ஊடுருவும் கேதெடர் அடிப்படையிலான நுட்பத்தின் மூலம் நேரடியாக இதய சேம்பர்களில் பொருத்தப்படுகிறது.
இந்த மருத்துவ நடைமுறை திறந்த அறுவை சிகிச்சைக்கான தேவையை நீக்குவதுடன் நோய் தொற்று ஏற்படாமல் லீட் பொருத்தப்பட்ட இடத்தில் இருந்து இடம்பெயராமல் வாஸ்குலர் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இந்த அதிநவீன சாதனம் பாரம்பரிய முறையை விட பல நன்மைகளை வழங்குகிறது. தொடை ரத்த நாள வழியாக மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறையின் மூலம் மருத்துவ பயனாளர்கள் விரைவாக குணம் அடைய முடியும்.
நீண்ட கால பாதுகாப்பு:
மேலும் பாரம்பரிய அறுவை சிகிச்சையினால் உண்டாகும் வடுக்கள் எதுவும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் லீட்களும், சர்ஜிக்கல் பாக்கெட்டும் இல்லாதது ரத்தப்போக்கு தாெற்று போன்ற சிக்கல்களைக் குறைக்கிறது. மருத்துவ பயனாளர்களுக்கு செளகரியாக இருக்குமளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் மருத்துவ பயனாளர்களுக்கு வசதியாகவும், மிகப்பெரிய பொருத்தமானதாகவும் நீண்ட கால பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் வலது ஏட்ரியம் மற்றும் வென்ட்ரிக்கிள் இடையேயான வயர்லெஸ் தொட்பு இதயத்தின் இயற்கை துடிப்பை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஒத்திசைவான உடலியல் தன்மையை செயல்படுத்துகிறது. ஏவிஇஐஆர் அமைப்பானது மினியேட்டரைசேஷன் உள்ளடங்கிய துல்லிய கண்காணிப்பு, துல்லிய வேகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது சிறந்த மருத்துவ விளைவுகளையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்கிறது.
மைல்கல்:
அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவரும், இதய நோய் நிபுணருமான மின் உடலியங்கில் நிபுணருமான டாக்டர் ஏஎம் கார்த்திகேசன் கூறும்போது, ஏவிஇஐஆர் இரட்டை சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இதயத்துடிப்பது தொடர்பான சிகிச்சையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறையாகும்.
இந்தியாவில் மேற்காெள்ளப்படும் இதய நோய் சிகிச்சையிலும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த புரட்சிகர தொழில்நுட்பம், லீட்கள், சர்ஜிக்கல் பாக்கெட்டுகள் ஆகியவற்றடன் தொடர்புடைய வழக்கமான அபாயங்களை நீக்குகிறது. அதே வேளையில் இதயத்துடிப்பின் துல்லியத்தை இது அளிக்கிறது. இது மிகப்பொருத்தமான திறன் வாய்ந்த முறையில் மருத்துவ பயனாளரின் செளகரியத்தையும், சிறந்த அனுபவத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இதை இதய நோய் சிகிச்சையில் மிகச்சிறந்த முன்னேற்றம் என்று நாங்கள் அழைக்கிறோம். இந்த முன்னேற்றம் மருத்துவ பயனாளர்களுக்கு பாதுகாப்பான மிகவும் செளகரியமான நீண்டகால இதய ஆரோக்கியத்தை உறுதி செய் உதவுகிறது. மேலும், இது எதிர்காலத்தில் பேஸ்மேக்கர் அமைப்புகள் பயன்படுத்தப்படும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்புகளை கொண்டுள்ளது என்றார்.
வெற்றி:
மருத்துவமனைகளின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறும்போது, அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பயனாளர்களுக்கான சிகிச்சைகளின் தர நிலைகளை மேலும் சிறப்பாக மாற்றி அமைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொணடு வருகிறோம்.
ஏவிஇஐஆர் லீட்லெஸ் பேஸ்மேக்கர் சிகிச்சை நடைமுறை வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவத்தில் நிபுணத்துவம், புதிய கண்டுபிடிப்புகள் மூலமான நவீன சிகிச்சைகள் மூலம் மருத்துவ பயனாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதில எங்களது தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த இதய நோய் சிகிச்சையை அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் கொண்டு வர வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை இந்த மைல்கல் சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றார்.
அப்போலோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சையில் நிபுணத்துவம் நவீன சிகிச்சைகள், துல்லியமான மருத்துவ நடைமுறைகள் ஆகியவற்றில் நாட்டிலேயே முன்னோடியாக இருந்து இத்துறையில் தொடர்ந்து தேசத்தை வழிநடத்தி வருகிறது. துல்லியம், பாதுகாப்பு, நோயாளிகளுக்கு ஏற்ற வசதி ஆகியவற்றை மேம்படுத்த அண்மைக்கால நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இதுபோன்ற ஒவ்வொரு முன்னேற்றத்துடனும், அப்போலோ சுகாதாரத்துறையில் புதுமைகளை செயல்படுத்துவதில் முன்னோடியாகவும், நோயாளிகளை மையமாகக் கொண்ட சிகிச்சையில் உலக அளவில் முன்னணியிலும் இருந்து, தனது முன்னணி நிலையை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.
அப்போலோ:
இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10 ஆயிரத்து 400க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6 ஆயிரத்து 600க்கும் அதிகமான மருந்தகங்கள், 264-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள் என இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது.
3 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2 லட்சத்திற்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்றுநோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது.
நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும் வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.
1983ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் இந்திய மருத்துவ உலகில் மிகப்பெரிய மருத்துவ புரட்சியை அப்போலோ ஏற்படுத்தியது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )




















