மேலும் அறிய

மாரடைப்பு- ஹார்ட் அட்டாக்: இரண்டும் வேறுதான்..வித்தியாசம் அறிவது எப்படி?

பொது அறிவைப் பொருத்தவரை இரண்டுமே ஒன்றுதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு என்கிறார்கள் மருத்துவர்கள். 

இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டாலே பொதுவாக நாம் அதனை மாரடைப்பு  ஹார்ட் அட்டாக் என மாற்றி மாற்றிக் குறிப்பிடுவோம். பொது அறிவைப் பொருத்தவரை இரண்டுமே ஒன்றுதான். ஆனால் இரண்டும் வெவ்வேறு என்கிறார்கள் மருத்துவர்கள். 

கடந்தவருடம் பிப்ரவரி மாதம் 24ந் தேதி பாலிவுட் நடிகர் ஸ்ரீதேவி தனது வீட்டின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.  ஸ்ரீதேவிக்கு ஏற்பட்டது மாரடைப்பு. 

மாரடைப்பு- ஹார்ட் அட்டாக்: இரண்டும் வேறுதான்..வித்தியாசம் அறிவது எப்படி?

மாரடைப்பு என்பது இதயம் திடீரென உடலுக்கு ரத்தத்தை வெளியேற்றுவதை நிறுத்துவதால் ஏற்படுவது. இதயத்துக்குச் செல்லும் மின்சார சிக்னல்களில் ஏற்படும் பாதிப்பால் இது உண்டாகும். ரத்த வெளியேற்றம் தடைபடும்போது மூளைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும் இதனால் நோயாளிக்கு மூச்சுவிடுவதில் பாதிப்பு ஏற்பட்டு நினைவுதவறி மயங்கி விழுவார்கள்.

மாரடைப்புக்கு பல காரணங்கள் உள்ளன, மாரடைப்பு மிகவும் பொதுவான நோயாகும். பிறவியிலேயே இதயப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது இதயத்துக்கு மின்சார சிக்னல்கள் செல்வதில் பிரச்னை உள்ளவர்கள் மாரடைப்புக்கு ஆளாக நேரிடும்.

மாரடைப்பு ஏற்படும் சூழலில், நோயாளிகள் திடீரென சுயநினைவை தவறி மயங்கி விழுவார்கள். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடல் சில எச்சரிக்கைகளை வெளிப்படுத்தும். அதாவது, மார்பில் லேசான வலி, மூச்சுத் திணறல், அசௌகரியம் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படும். மக்கள் பெரும்பாலும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள் ஆனால் இவைதான் மாரடைப்புக்கான பொதுவான சில அறிகுறியாகும். மன அழுத்தம் மற்றும் சாப்பிடும் உணவினால் கூட இதயத்தில் மோசமான தாக்கத்தை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான, ஆரோக்கியமான, சீரான உணவுப் பழக்க வழக்கத்தைப் கொண்டிருப்பது அபாயத்தைத் தடுக்கும். 

ஹார்ட் அட்டாக் அல்லது நெஞ்சுவலி என்றால் என்ன? 

மருத்துவ மொழியில் மயோகார்டியல் இன்ஃபார்க்‌ஷன் எனப்படும் ஹார் அட்டாக் மாரடைப்பிலிருந்து மாறுபட்டது. இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் நாளத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக இந்த ஹார்ட் அட்டாக் ஏற்படும். ரத்தம் செல்லுவது நின்றுபோவதால் இதயம் வலுவிழக்கத் தொடங்கும். சில சமயங்களில் இதயத்தின் ஒருபகுதிக்கோ அல்லது ஒட்டுமொத்த இதயத்துக்கோ ரத்தம் செல்லுவது தடைபடும். இதனால் அந்தப் பகுதி தசையில் இருக்கும் செல்கள் மெல்ல இறக்கத் தொடங்கும். இதயம் தனது வேலையை இதன் பிறகு செய்யும் என்றாலும் அதனால் பழையபடி இயங்கமுடியாது. புரியும்படி சொன்னால் இதயத்தின் ப்ளம்பிங் குழாயில் ஏற்படும் பிரச்னையால் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது எனலாம். 

மாரடைப்பைப் பொருத்தவரை உடனடியாக சிபிஆர் செய்வதால் மீட்க முடியும், இருந்தும் மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவர்களில் 90 சதவிகிதம் பேர் இறக்கின்றனர் என்கிறது ஆய்வு.  அதுவே ஹார்ட் அட்டாக்கை பொருத்தவரை இதயம் உடனடியாக அல்லாமல் சிறிது சிறிதாகவே தனது செயல்பாட்டை நிறுத்தும் என்பதால் மாரடைப்பு அளவுக்கு ஆபத்தானது இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
 
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget