மேலும் அறிய

ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ்  – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில்   ஸ்ட்ரீமிங் ஆகிறது!

விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது.

 

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும்  இந்த சீரிஸை  சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.

ஹார்டிலே பேட்டரி

‘ஹார்டிலே பேட்டரி’  சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள். 24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள் —ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்றது என்று நினைக்கும் மனிதன் அவன். அறிவியல் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? காதலின் மொழியை அறிவியல் மொழிபெயர்க்க முடியுமா? என்பதைக் கேட்கும் ஒரு இனிமையான, சுவாரஸ்யமான பயணம் இதுவாகும்.

நடிகர் குரு லக்ஷ்மன் கூறியதாவது

“சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’  ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.”

பாதினி குமார் கூறியதாவது

“சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்—தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது.”

ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் பிசினஸ் ஹெட் மற்றும் SVP மார்க்கெட்டிங் சவுத் லாய்டு சி சேவியர் கூறியதாவது..,
‘ஹார்டிலே பேட்டரி’ அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு  இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது. புதிய கதைக்களங்களையும் உணர்ச்சிமிக்க காட்சிப்படுத்தல்களையும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்றுள்ளனர். இந்த சீரிஸில் இருக்கும் புதுமையும், உணர்வுகளும் ஒருங்கிணைந்து, இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கும்.”

 

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget