Veera Serial: வீரா, மாறனுக்கு ஷாக் கொடுத்த ராகவன்.. வீரா சீரியலில் இன்று நடப்பது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பதை காணலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் மாறனும் வீராவும் கடைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ராமச்சந்திரன் ராகவன், கண்மணி ஆகியோர் வந்து கதவை திறந்து உள்ளே வரத் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் கண் விழிக்கும் மாறன் ஓடிப்போய் ஒளிந்து கொள்ள வீராவும் கண் விழித்து விடுகிறாள். பிறகு வீராவை பார்த்த இவர்கள் நீ இங்க தான் இருக்கியா மா.. ஒரு போன் பண்ண கூடாதா என்று கேட்க போன் சுவிட்ச் ஆஃப் என்று சொல்கிறாள்.
பிறகு வீரா மாறனை தேட மாறன் எதுவும் சொல்லாத கிளம்பி போ என்று சைகை காட்ட வீரா கிளம்பி வந்து விடுகிறாள். அடுத்த நாள் காலையில் கண்மணி ராகவனுக்கு காபி கொண்டு வந்து கொடுக்க அவன் இன்னைக்கு லீவ் போட்டு விடவா வெளியில எங்கேயாவது போகலாமா என்று கேட்டு ரொமான்டிக்காக நெருங்கி அவளை கட்டிப்பிடிக்க போக கண்மணி அவனை பிடித்து தள்ளிவிட்டு உங்களுக்கு எப்பவும் இதே நினைப்பு தானா என்று கோபப்பட ராகவன் முகம் மாறி விடுகிறது.
பிறகு வீர கடை திறந்து உள்ளே வர மாறன் தூக்க கலகத்தில் எழுந்து வர கடையில் வேலை செய்பவன் என்ன அண்ணே காலையிலேயே கிளம்பிட்ட என்று கேட்கிறான். வீராவும் இவ்வளவு வேகமா எங்க போற? என்ன வேலை என்று கேட்க நைட் எல்லாம் நிறைய வேலை.. போயிட்டு ஒரு கட்டிங் போட்டு தூங்கினால் தான் நன்றாக இருக்கும் என்று சொல்கிறான்.
இதைக் கேட்டு வீரா குடிகாரன் என்று திட்ட இருவருக்கும் வாக்குவாதம் உருவாக மூணு நாள் நீ குடிக்காம இரு நான் உன்னை குடிகாரன்னு சொல்ல மாட்டேன் என்று வீரா சவால் விட மாறன் அந்த சவாலை ஏற்றுக் கொள்கிறான்.
அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் வீராவுக்கு ஒரு போன் கால் வர ஃபோனை எடுத்துப் பேசும்போது ஒருவர் ராமச்சந்திரனோட பையன் இங்க குடி போதையில விழுந்து கிடக்கிறான் என்று சொல்கிறார். வீரா அது மாறனா தான் இருக்கும் என நினைத்து கிளம்பி வருகிறாள்.
போனில் சொன்ன இடத்திற்கு வந்து பார்க்க மாறன் சாதாரணமாக நடந்து வர வீரா அதுக்குள்ள போதை தெளிஞ்சிடுச்சா என்று கேட்க மாறன் நான் குடிக்கவே இல்லை என்று சொல்கிறான். பிறகு திடீரென கண்மணி கண்மணி என சத்தம் கேட்க கீழே பார்க்க ராகவன் போதையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
வீரா மாமா இப்படி குடிப்பாரா என்று கேட்க மாறன் இல்ல அவன் எப்பயாச்சு தான் என் கூட சேர்ந்து லைட்டா குடிப்பான், இப்படி குடிக்கிற ஆளே கிடையாது என்று சொல்லி ஆட்டோவில் தூக்கி போட்டுக் கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். ராகவன் கண்மணி என்னை நெருங்கவே விட மாட்டுறா, என் வாழ்க்கையே போச்சு, அவளுக்கு என்னை பிடிக்கவே இல்லை என்று புலம்பியபடி வருகிறான்.
அதே சமயத்தில் கார் ஆக்சிடென்ட் பற்றி புலம்ப தொடங்க மாறன் வாயை பொத்து விடுகிறான். பிறகு ராகவனை வீட்டிற்கு அழைத்து வந்ததும் மாறன் மெதுவாக கதவை திறக்க ராமச்சந்திரன் ஹாலில் பாட்டு கேட்டபடி உக்காந்துக்கு இருக்கே ராகவனை உள்ளே அழைத்து போக முடியாமல் தவிக்கின்றனர்.
ராகவன் கண்மணி என புலம்பும் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் எழுந்து வெளியே வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.