Sandhya Ragam: ஊரார் காலில் விழப்போகும் ரகுராம்? பரபரப்பு திருப்பங்களுடன் சந்தியா ராகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற தொடர்களில் சந்தியா ராகம் மிகவும் முக்கியமான தொடர் ஆகும். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய எபிசோடில் ரகுராம் பஞ்சாயத்தில் குற்றவாளியாக நின்ற நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காலில் விழப்போகும் ரகுராம்:
ரகுராம் பஞ்சாயத்தில் குற்றவாளியாக நிற்க அவருக்கு தண்டனை எல்லாம் வேண்டாம் என்று ரகுராம் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் சொல்கின்றனர். லிங்கம் ஏற்பாடு செய்த ஆள் இந்த விதிமுறைகளை கொண்டு வந்ததே அவர் தானே, ஊருக்கு ஒரு சட்டம் அவருக்கு ஒரு சட்டமா? என்று கேட்க ரகுராம் உங்க கடைமையை நீங்க செய்யுங்க என்று சொல்கிறார்.
அதன் பிறகு ரகுராம் இடுப்பில் துண்டை கட்டி கொண்டு காலில் விழ தயாராக மழை கொட்ட தொடங்க ஊர் மக்கள் எல்லாரும் தலை குனிந்து நிற்கின்றனர். அடுத்து ரகுராம் மண்டியிட்டு குனிய போகும் சமயத்தில் ஒரு கார் வந்து நிற்க என் பெரியப்பா யார் காலிலும் விழ கூடாது என்று ஓடி வந்து ரகுராமை தடுத்து நிறுத்துகிறாள்.
உண்மையை உடைத்த மாயா:
எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என்று மாயாவை திட்ட லிங்கம் சொன்னது போல எங்களுக்கு கல்யாணம் ஆகல என்று உண்மையை உடைக்கிறாள் மாயா. என் பெரியப்பா கொடுத்த வாக்கு தவறி போகல, அப்படி இருக்கும் போது இந்த பிராது எப்படி செல்லுபடியாகும்? புகார் வந்தா முழுசா விசாரிக்க மாட்டீங்களா என்று கோபப்படுகிறாள்.
அடுத்து லிங்கம் லெட்டர் எழுதி வச்சிட்டு எதுக்கு ஓடி போனீங்க என்று கேள்வி கேட்க அது எங்க குடும்ப விஷயம், அதை நாங்க பார்த்துகிறோம் என்று ரகுராமுடன் கிளம்பி வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு வந்த சீனு, மாயாவை ரமணி நில்லுங்க என்று சத்தம் போட்டு வாசலில் நிற்க வைக்கிறாள். எதுக்கு இப்படி பண்ண என்று மாயாவையும் திட்டுகிறாள்.
அடுத்து நடப்பது என்ன?
மேலும் அவ கூப்பிட்டா நீ போய்டுவியா டா? உனக்கு எங்க போச்சு அறிவு என்று ஆவேசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.