Karthigai Deepam: "வா ஓடி போகலாம்.. " கார்த்தியின் பொண்டாட்டியிடம் கேட்ட மகேஷிற்கு கத்திக்குத்து
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் மகேஷை காப்பாற்றச் சென்ற ரேவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகேஷை கடத்தி வைத்திருப்பது சாமுண்டீஸ்வரி தான் என்ற விஷயம் ரேவதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மகேஷிற்கு கத்திக்குத்து:
அதாவது, கார்த்திக்கு போன் கால் வர அவன் அருணை சென்று சந்திக்கிறான். இன்னொரு பக்கம் ரேவதி யாருக்கும் தெரியாமல் மகேஷை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு வருகிறாள். கட்டப்பட்டு கிடக்கும் மகேஷை காப்பாற்றுகிறாள். இங்கிருந்து தப்பித்து போ என்று சொல்ல அவன் ரேவதியை வா எங்கேயாவது போய் விடலாம் என்று சொல்கிறான்.
ஆனால் ரேவதி தனக்கு கல்யாணம் ஆகிருச்சு.. அதெல்லாம் சரியா வராது நீ தப்பித்து போ என்று சொல்கிறாள். இந்த சமயத்தில் ரவுடிகள் அங்கு வந்து விடுகின்றனர். ரவுடிகள் மகேஷை பிடிக்க முயலும் போது அவனை கத்தியால் குத்தி விட ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து ரவுடிகள் அங்கிருந்து தப்பி செல்ல கார்த்திக் ரேவதி எங்கே போனா என்று சந்தேகப்பட்டு இங்கு வர மகேஷ் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கவனித்து அவனை தனக்கு தெரிந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான்.
குழப்பத்தில் சாமுண்டீஸ்வரி:
சாமுண்டேஸ்வரி குடோனுக்கு வர அங்கு யாரும் இல்லாததை பார்த்து குழப்பம் அடைகிறாள். மாயா வீட்டிற்கு செல்ல அங்கு அவள் மகேஷை காணவில்லை என புலம்பியபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















