13 Years Of Kadhal Solla Vanthen: சீனியர் பெண்ணை காதலிக்கும் ஜூனியர்.. யுவனின் மாயாஜாலம்.. 13 ஆண்டுகளை கடந்த காதல் சொல் வந்தேன்..!
அன்புள்ள சந்தியாவென்று காதல் தோல்வியில் நாம் கல்லூரி காலத்தில் கேட்ட இந்தப் பாடல் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றன
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நல்ல பாடல்களின் வழியாக ஒரு படத்தை வெற்றியடைய வைக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார் யுவன் ஷங்கர் ராஜா.
காதல் சொல்ல வந்த ஒரு புது நடிகர்
கல்லூரி வாழ்க்கையையும் கல்லூரிகளின் காதல் கதைகள் திரைப்படங்களில் அதிகம் வெளிவந்த ஒரு காலம். கல்லூரி, ஒரு கல்லூரியின் கதை, இந்த படங்களின் வரிசையில் வெளியான படம்தான் காதல் சொல்ல வந்தேன். யுதன் பாலாஜி நாயகனாகவும் மேக்னாராஜ் நாயகியாகவும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சொல்லப்போனால் இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகனே அவர் தான். இந்தப் படம் அனைவரிடத்திலும் பிரபலமானது என்றால் அதற்கு காரணம் யுவன் தான்.
சீனியர் - ஜூனியர் காதல்:
பிரபு என்கிற கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஒருவன் சந்தியா என்கிற பெண்ணால் ஈர்க்கப்படுகிறான். தன்னைவிட வயதில் மூத்தவள் என்று தெரிந்தும் அவளை காதலிக்கவும் தொடங்குகிறான், ஆனால் சந்தியா பிரபுவை தனது நண்பனாகவே பார்க்கிறார். படம் முழுக்க சந்தியாவை ஒன் சைடாக மட்டுமே காதலித்து வரும் பிரபுவின் மைண்ட் வாய்ஸில் தான் அத்தனை பாடல்களும் ஓடுகின்றன. வேறு வழியில்லாமல் ஒரு கட்டத்தில் தனது காதலை சந்தியாவிடம் தெரிவிக்கிறான் பிரபு. அதை அவர் மறுக்கவும் தற்கொலை செய்யப் போவதாக பொய்யாக அவரை மிரட்டுகிறார். கடைசியில் பிரபுவின் காதலை சந்தியா ஏற்றுக்கொள்கிறார். ஆனால் பிரபு எதிர்பாராத விதமாக உண்மையாகவே மரணமடைந்து விடுகிறார்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை இருவரும் சேருவார்களா? இல்லையா? என்கிற ஆர்வத்தில் காத்திருந்த பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது இந்தப் படம். வயதில் மூத்த ஒருவரை காதலிப்பது தவறு என்று சொல்லும் சமூதாயத்தைப் பற்றிய தனது எல்லா பயங்களையும் உதற்விட்டு சந்தியா பிரபுவை ஏற்றுக்கொண்டதாக காட்டிவிட்டு பின் பிரபுவை இறப்பதாக காட்டுவதன் மூலம் சமூதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கே நியாயம் சேர்க்கிறார்.
கட்டி ஆண்ட யுவனின் இசை:
இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படத்தின் கதை நினைவில் இருக்கிறதென்றால் ஹிரோ ஒவ்வொரு எமோஷனில் இருக்கும்போதும் அந்த உணர்வை நம்மை ஃபீல் செய்ய வைத்த யுவனின் பாடல்கள்தான் காரனம். நாயகன் காதல் வாயப்படும்போது, தனக்கான ஒரு கனவு கோட்டையை கட்டி அதில் வாழும்போது, காதல் தோல்வியில் கிடக்கும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் என ஒட்டுமொத்த ஆல்பம் ஹிட் கொடுத்தார் யுவன் ,ஒரு சுமாரான படத்தையும் தனது இசையின் மூலம் வெற்றிபெறச் செய்ய முடியும் என்று நிரூபித்தார்.