கன்னியாகுமரி ஸ்லாங்தான் ஸ்பெஷல்.. ஒரே வருடத்தில் ஒரு மில்லியன் - யூடியூப் ஷார்ட்ஸ் ரிஷப் கதை!
‘எதிர்ப்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், எனக்கு முழு ஆதரவு கொடுத்தவர் எனது அம்மா’ என்று கூறிய ரிஷப், மேலும் பலர் தகவல்களை அந்தப்பேட்டியில் பகிர்ந்துக்கொண்டார்.
ஒரே வருடத்தில் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை போட்டு, கோல்டன் பட்டனை வாங்கியுள்ளார் யூடியூப் கண்டெண்ட் கிரியேட்டர் ரிஷப். அவரை பற்றிய பேட்டியை தனியார் யூடியூப் சேனலான நியூஸ் கிளிட்ஸ் எடுத்துள்ளது. அதில், ரிஷப் என்னெவெல்லாம் பேசியுள்ளார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
எப்படி கண்டெண்ட் கிரியேட்டர் ஆகலாம் என்று யோசனை வந்தது?
பெரியளவில் ஐடியா எல்லாம் ஒன்றும் இல்லை. நார்மலா கன்னியாகுமரி மொழியில், ஸ்டைலில் செய்ய வேண்டும். கன்னியாகுமரி வித்தியாசமாகவும், குறும்பாகவும் இருக்கும். நம்ம வீட்டில் நம்ம அம்மா, அப்பா எந்த மாதிரி நடந்துகொள்வர்கள் என்பதை வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை முயற்சி செய்தது ஒரு கண்டெண்ட் ஆக வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பில் இருந்து ஷார்ட்ஸில் வீடியோ போட வேண்டும் என்று யோசனை வந்தது. ஆனால், இந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. தற்போது, நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது.
தற்போது, கோவையில் இருக்கிறீர்கள். கன்னியாகுமரிதான் உங்கள் சொந்த ஊரா?, கன்னியாகுமரி வட்டார மொழி எப்படி இருக்கும்?
ட்டி, வாட்டி,போட்டி இந்த வார்த்தை கன்னியாகுமாரியின் அனைத்து இடத்திலும் இருக்காது. நாகர்கோவில் உள்ளிட்ட அவுட்டர் ஏரியாக்களில் இந்த மாதிரி பேசுவார்கள். அதை வைத்து வீடியோ போடலாம் என்று யோசனை வந்தது.
யூடியூபில் கண்டெண்ட் போடுவது குறித்து யாரிடம் சொன்னீர்கள்?
இந்த யோசனை எனக்கு தானாக தோன்றியதுதான். விடியற் காலை 5 மணியளவில்
‘யூடியூபில் நான் நல்ல வருவேன் என்பது போல’ கனவு வந்தது. அதற்கு முன்பு யூடியூபை டைம் பாஸிற்காக பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் வீட்டில் அம்மாகவும், அக்காவும் சும்மா இருக்கும் நேரத்தில் யூடியூபில் வீடியோ எதாவது போடலாமே என்று கூறினார்கள். ஊரடங்கு காலத்தில் நிறைய பேர் யூடியூப் சேனலை தொடங்கிவிட்டனர். அதற்கேற்றாற் போல கனவும் வந்தது. அப்போது காலையில் எந்திரிக்கும்போது, எதாவது செய்யலாமே என்று யோசனை வந்தபோது, கண் முன்னாடி ஒரு கொசு பேட் இருந்தது. அதை வைத்து ஏதாவது முயற்சி செய்யலாமே என்று யோசனை வந்தது. கொசுபேட்டில் மாங்கா பிடிப்பது என்று போட்ட வீடியோ ஒருநாளில் 1k views வந்தது. ஒருநாளில் இவ்வளவு வியூவ்ஸ் ஆ என்று ஆச்சரியப்பட்டேன். கமெண்ட்ஸ் கூட நேர்மறையாக வந்தது. Vlog views இல்லாததால், ஷார்ட்ஸில் போடலாம் என்று யோசனை வந்தது. நிஜ வாழ்க்கையில் பார்த்தை அப்படியே வீடியோவாக போட்டேன்.
பெண் வேடங்கள் போடுவது குறித்து யாராவது கிண்டல் செய்து இருக்கிறார்களா?
புடவை கட்டிக்கொண்டு நடித்தால் ட்ரோல் செய்வார்கள் என்று, முக்காடு போட்டுக்கொண்டு fun செய்யலாம் என்று தோன்றியது. நயன்தாரா வாரான் என்று முதலில் கிண்டல் செய்தார்கள். தற்போது அதை காமெடியாக பார்க்கின்றனர்.
கண்டெண்ட் வீடியோவில் எந்ததெந்த கேரக்டரை நீங்கள் இன்வால்வ் செய்கிறீர்கள்?
நயன்தாரா அக்கா, தமன்னா ஆண்ட்டி, அம்மாவோட கேரக்டர். அதாவது பக்கத்து வீட்டுக்காரங்க வந்தாங்க நயன்தாரா அக்கா சொல்ற மாதிரி.
ஒரு வருடத்தில் கோல்டன் பட்டன் வாங்கியுள்ளீர்கள். அது குறித்து கூறுங்கள்.
1 மில்லியன் என்று நிறையே பேர் கூறுவார்கள். ஆனால், எனக்கு அப்படி தோன்றவில்லை. வெளியில் என்னைப்பார்க்கும் போது என்னிடம் புகைப்படம் எடுத்தால் அப்போது சிறிது உணருகிறேன் 1 மில்லியன் குறித்து.
ஒரு நாளை எவ்வளவு ஷார்ட்ஸ் போடுவீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்?
ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போட்டுக்கொண்டிருக்கிறேன். 4 அல்லது 5 கேரக்டர் இருந்தால், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகலாம். இரண்டு, மூன்று கேரக்டர் என்றால் ஒன்றை மணி நேரத்தி முடியும். நயன்தாரா வாய்ஸ் மட்டும் வருவதற்கு கொஞ்சம் நேரமாகும்.
‘எதிர்ப்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், எனக்கு முழு ஆதரவு கொடுத்தவர் எனது அம்மா’ என்று கூறிய ரிஷப், மேலும் பலர் தகவல்களை அந்தப்பேட்டியில் பகிர்ந்துக்கொண்டார்.