Yogi Babu: யோகி பாபுவின் பொம்மை நாயகி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
இன்று யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ’பொம்மை நாயகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
’மண்டேலா’ படத்தை அடுத்து யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தி இசையமைத்தும் உள்ளார்.
முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை.22) யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ’பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டரை படக்குழு முன்னதாக வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் நடக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாக, வெகுஜன மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சார்ந்த கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூரில் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
யோகி பாபு கதாநாயகனான நடித்து வெளியான ’மண்டேலா’ படம் இன்று அறிவிக்கப்பட்ட 68ஆவது தேசிய விருதுகளில் இரண்டு விருதுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்