Yogi Babu: மாஸ் கிரிக்கெட் பயிற்சி... தோனி, கோலிக்கு சவால்விடும் யோகி பாபு! இதுதான் விஷயமா?
கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகிபாபு, கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு பந்துக்களை பவுண்டரிகளுக்கு விளாசும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' மூலம் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய யோகி பாபு, அமீரின் யோகி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
தொடர்ந்து தன் தனித்துவ தோற்றம், நடிப்புத் திறமை காரணமாக சூது கவ்வும் அட்டக்கத்தி, டிமாண்டி காலனி, ஆண்டவன் கட்டளை படங்கள் மூலம் யோகி பாபு கவனம் ஈர்த்தார். தொடர்ந்து மெர்சல், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், பிகில் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இதனை அடுத்து தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக யோகிபாபு களம் இறங்கினார். இதில் மண்டேலா திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இவர் நடித்துள்ள பொம்மை நாயகி படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட யோகிபாபு, கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு பந்துக்களை பவுண்டரிகளுக்கு விளாசும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
— Yogi Babu (@iYogiBabu) December 1, 2022
— Yogi Babu (@iYogiBabu) December 1, 2022
முன்னதாக தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபு அதனைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
யோகி பாபு தனது 13 ஆண்டுகள் திரைப்பயணத்தை குறித்து பேசுகையில் அவரது பயணத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த திரைத்துறையினர், மீடியா மற்றும் உறுதுணையாய் இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். 2009ஆம் ஆண்டு தான் அறிமுகமான 'யோகி' திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ அமீர், சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த சுப்ரமணியம் சிவா ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.