யோகி பாபுவின் 300 ஆவது பட டைட்டிலை வெளியிட்ட விஜய் சேதுபதி
முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...!!!

தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் D.தங்கபாண்டி, S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில் , அறிமுக இயக்குனர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்.
யோகிபாபு 300 ஆவது பட ஃபர்ஸ்ட் லுக்
தமிழகத்தில் இடி மின்னலுக்கு பயப்படும் மக்கள் அர்ஜுனா! அர்ஜுனா! என்று சொல்வதைப் போலவே.. மதுரையை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் அர்ஜுனன் பேர் பத்து என்று சொல்வது வழக்குச் சொல்லாக உள்ளது.. இந்த அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வழக்கமான யோகி பாபு படமாக இல்லாமல் பழைய வாகனங்கள் விற்பதில் நடக்கும் மோசடிகள் பற்றியும்.. அந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பற்றியும்.. இனி பழைய வாகனங்களை வாங்கவிருக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்.. உண்மை சம்பவத்தை மையமாக வைத்தே அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகியுள்ளது..
இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உணர்வுபூர்வமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ரா.ராஜ் மோகன்..இப்படத்தில் நகைச்சுவை நாயகன் யோகி பாபு யதார்த்தம் கலந்த உணர்ச்சி பூர்வமான கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. கதையின் நாயகியாக அனாமிகா மகி அறிமுகமாகிறார்..மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியன் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன்,ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.. இவர்களுடன் இயக்குனர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது... இத்திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்க.. தண்டகாருண்யம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. படத்தொகுப்பினை காசி விஸ்வநாதன் செய்ய.. அமரன் படத்தின் கலை இயக்குனரான சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார்.. இப்படத்திற்கான வசனத்தை M.R.அருண் சந்தர் எழுதி இருக்கிறார்.. சண்டை காட்சிகளை ஓம் பிரகாஷ் வடிவமைத்திருக்கிறார்.. தலைவன் தலைவி படத்தின் ஆடை வடிவமைப்பாளர் நட்ராஜ் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார்... தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது... விரைவில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்...
தயாரிப்பு :
Dev Cinemas Pvt Ltd.,
D.தங்கபாண்டி
S. கிருத்திகா தங்கபாண்டி
இயக்கம் : ரா.ராஜ்மோகன்
இசை அமைப்பாளர்:
D. இமான்
பாடல்கள் :
கார்த்திக் நேத்தா
ஒளிப்பதிவு:
பிரதீப் காளிராஜா
படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன்
கலை: B. சேகர்
வசனம்:
M.R. அருண் சந்தர்
சண்டை: ஓம் பிரகாஷ்
உடை: கே.நட்ராஜ்
ஒப்பனை:
“அறந்தை” தினேஷ்
தயாரிப்பு நிர்வாகம்:
K.சின்ன துரை,
R. ராஜாராம்
நிர்வாகத் தயாரிப்பு:
மதி ஆனந்தன்
தயாரிப்பு மேற்பார்வை: S.அழகர்சாமி
இணை தயாரிப்பாளர்: L.சுந்தரபாண்டி
ஒலிகலவை: டி.உதயகுமார்
சப்தம்:
இரஞ்சித் வேணுகோபால் ,
சரவணகுமார்
நிழற்ப்படம்: திலீப் குமார்
விளம்பர வடிவமைபு: சின்னா சுரேஷ்
மக்கள் தொடர்பு : A.ராஜா





















