இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படம் 'த ராஜா சாப்' . இப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

Published by: ராகேஷ் தாரா

பாகுபலி படத்தைத் தொடர்ந்து தொடர்ந்து ஆக்‌ஷன் மாஸ் திரைப்படங்களில் நடித்து வந்த பிரபாஸ் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ரித்தி குமார் , மாளவிகா மோகனன் , நிதி அகர்வால் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரபாஸ் திருமணம் பற்றிய கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்தார்

46 வயதை எட்டியுள்ள பிரபாஸின் திருமணத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை பிரபாஸ் தனது திருமணத்தைப் பற்றி வெளிப்படையாக எந்த ஒரு தகவலும் தெரிவித்ததில்லை

த ராஜா சாப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸிடம் 'உங்களுக்கு எந்த மாதிரியான குனங்கள் உடைய பெண் மனைவியாக வரவேண்டும் ' என்று கேள்வி எழுப்பட்டது

இதற்கு பதிலளித்த பிரபாஸ் ' அது தெரியாமல் தான் நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறேன்' என்று நகைச்சுவையாக பதிலளித்தார்

தனது படத்தில் நடித்த நடிகைகள் குறித்து பேசுகையில் பிரபாஸ் 'நடிகைகளில் ரித்தி குமார் அழகானவர் என்றும், மாளவிகா மோகனனின் கண்கள் அழகாக இருக்கும் என்றும், படப்பிடிப்பில் அனைவரின் விருப்பமானவர் நிதி அகர்வால் என்றும் கூறினார்

அடுத்தபடியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்தில் நடித்து வருகிறார்