Jagame Thandhiram | அவசரப்பட்ட சந்தோஷ் நாராயணன்; ஏமாற்றம் அடைந்த கார்த்திக் சுப்புராஜ்!
இன்று ஜகமே தந்திரம் ஆடியோ ரிலீசாகும் நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தரவிருந்த சஸ்பென்ஸ் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முன்கூட்டியே உடைத்து அவருக்கு ஏமாற்றத்தை தந்தார்.
திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்பரிப்புடன் இந்த படம் வெளியாகும் என்று நினைத்த வேளையில் இந்த திரைப்படம் தற்போது OTT தளத்தில் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இணைய வழியில் நடக்கவிருக்கும் ஆடியோ லான்ச் குறித்து ஒரு சஸ்பென்ஸை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முன்வைக்க இருந்த நிலையில் அதை பொசுக்கென்று உடைத்துள்ளார் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
Hello boss @Music_Santhosh .. Naan Surprise athu ithunu build up koduthutu iruntha...ippadi posukkunu solliteengaley 😊
— karthik subbaraj (@karthiksubbaraj) June 6, 2021
Yes... @dhanushkraja will join us tomorrow 7 pm #JTIsaiTalks
Be Safe, Be at Home & Join us to talk about the #JagameThandhiram album 🎶🎶#JTAlbumOnJune7 https://t.co/XydtEGb1D0
இதுகுறித்து இயக்குநர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'ஹலோ பாஸ் சந்தோஷ் நாராயணன், நான் Surprise அதுஇதுனு பில்டப் குடுத்துட்டு இருந்தா நீங்க இப்படி பொசுக்குனு சொல்லிட்டீங்களே' என்று கூறி இன்று நடக்கவிருக்கும் இசை வெளியீட்டு விழாவில் இணைய வழியில் தனுஷ் அவர்களும் கலந்துகொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். பிரபல Stand Up காமெடியன் அலெக்சாண்டர் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழு, இயக்குநர் கார்த்திக் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். சரியாக இன்று மாலை 7 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமாக உள்ளது.
Ar Rahman song | இன்றைய இரவைக் கொஞ்சம் இலகுவாக்கும் ரஹ்மான் ஹிட்ஸ்
Hello boss @Music_Santhosh .. Naan Surprise athu ithunu build up koduthutu iruntha...ippadi posukkunu solliteengaley 😊
— karthik subbaraj (@karthiksubbaraj) June 6, 2021
Yes... @dhanushkraja will join us tomorrow 7 pm #JTIsaiTalks
Be Safe, Be at Home & Join us to talk about the #JagameThandhiram album 🎶🎶#JTAlbumOnJune7 https://t.co/XydtEGb1D0
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கான பணிகள் 2018ம் ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. இறுதியில் தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடவுள்ளது.
வருகிற ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.