Yash on Bollywood : "வுட்" என்ற எண்ணத்தை எரிப்போம்..! கே.ஜி.எஃப். நாயகன் என்ன சொன்னார் தெரியுமா..?
நான் கே.ஜி.எஃப். படத்தில் நடித்ததால், எப்போதும் இது போல் பிரபலமாக இருப்பேன் என்பது நிச்சயம் இல்லை என யஷ் கூறியுள்ளார்.
யஷ்ஷிற்கு பிடிக்காதது வன்முறை மட்டும் அல்ல . பிளாக்பஸ்டரான கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகரான யஷ், பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என சினிமா துறையை தனி தனியாக பிரித்து பார்க்கும் எண்ணத்தையும் வெறுக்கிறார்.
பத்திரிகை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட யஷ்ஷிடம், உங்களுக்கு பாலிவுட் தேவை என்பதை விட, பாலிவுட்டிற்குதான் நீங்கள் தேவை என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது , "தற்போது பார்வையாளர்கள், நடிகர்கள் எந்தத் துறையில் இருந்து வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் நல்ல படங்களைத் தான் விரும்புகிறார்கள் "என யஷ் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “எனக்கு பாலிவுட், சாண்டல்வுட் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை, இந்த ‘வுட்ஸ்’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வுட் என்ற எண்ணத்தை எரிப்போம். தென் இந்திய சினிமா முன்னேறி வருகிறது, பாலிவுட்டின் கதை கந்தலாகி விட்டது போன்ற எண்ணங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இங்கே முக்கிய விஷயம் என்னவென்றால், நாங்கள் எங்கள் மரியாதைக்காக போராடினோம், இந்த நாட்டில் ஒவ்வொரு நடிகரும் நடத்தப்படுவது போல் எங்களை நடத்துங்கள்.
View this post on Instagram
சமீபத்தில் வெற்றி பெற்ற காந்தாரா, சார்லி 777, கருட கமனா விருஷப வாகனம் போன்ற கன்னடப் படங்கள் கர்நாடகாவை தாண்டி மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றது. பேனர் வைத்து நீங்கள் அதை நன்கு விளம்பரப்படுத்தினால் அது அதிகமான மக்களைச் சென்றடையும். கேஜிஎஃப் வெற்றி அடைந்ததால் நான் கர்வம் கொள்ள முடியாது , மேலும் நான் நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரம் என்றும், பாலிவுட்டிற்கும் மேலானவன் போன்ற எண்ணம் எனக்கு கிடையாது.
நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. நான் கேஜிஎஃப் படத்தில் நடித்ததால், எப்போதும் இது போல் பிரபலமாக இருப்பேன் என்பது நிச்சயம் இல்லை. சிறப்பாக வேலை செய்தால், நாடு முழுவதும் உள்ள மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்." என்று கூறினார்.
மேலும் படிக்க : Pradeep Ranganathan : இனிமே ஹீரோவா..? டைரக்டரா..? "லவ் டுடே" நாயகன் பிரதீப் ரங்கநாதன் சிறப்பு பேட்டி..!