Hollywood: போராட்டத்தில் ஈடுபடும் திரைப்பட எழுத்தாளர்கள்: ஒடிடி நிறுவனங்களுக்கு சவால்: காரணம் என்ன?
அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. ஒடிடி நிறுவனங்களிடம் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் இந்த முடிவு
ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னணி திரைப்பட நிறுவனங்களுடன கடந்த ஆறு வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்படிக்கையும் ஏற்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் டிஸ்னி ஆகிய நிறுவனங்ளுக்கு மற்றும் அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஆகியவர்களுக்கு இடையில் ஊதிய உயர்வு மற்றும் வேலை உத்தரவாதம் அளிக்கப்படுவது குறித்தப் பேச்சுவார்த்தை கடந்த ஆறு வாரங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிறுவனங்கள் சார்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கப் படாத நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபோவதாக அறிவித்துள்ளது அமெரிக்கத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம். இந்த அறிவிப்பு ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தால் ஹாலிவுட் பெரும் பொருளாதார இழப்புகளை சந்திக்கும். இதற்கு முன்பு கடந்த 2007 ஆம் ஆண்டில் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஹாலிவுட் திரையுலகம் இரண்டு பில்லியன் அளவிற்கான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டத்து. இந்த போராட்டம் நடைபெற்றால் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பல தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்பட வேலைகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிபந்தனைக்கு உள்ளாகும். ஜிம்மி கிம்மல் லைவ் போன்ற ஹாலிவுட்டில் பல பிரபலமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது நிறுத்தப்படும். நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓ.டி.டி தளங்கள் புதிதாக தொடங்கவிருக்கும் ஹாலிவுட் வெப் சீரிஸ்களை நிறுத்த வேண்டி இருக்கும் மற்றும் ஏற்கனவே வெளியிடப்பட்ட சீரிஸ்களின் அடுத்த சீசன்கள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப் படும்.
இந்த மொத்த பிரச்சனையும் தொடங்கியது ஒடிடி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக குறைந்த கால அளவிற்கு மட்டும் அதுவும் வெகு சில எழுத்தாளர்களை மட்டுமே பனியில் வைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்ததனால் . இதனை தொடர்ந்து அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் ஒடிடி மற்றும் தொலைகாட்சி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டத்து.இந்த பேச்சுவார்த்தை ஆறு வார காலம் நடைபெற்று வந்தது.இதில் திரைப்படச் சங்கம் சார்பாக சில கோரிக்கைகள் வைக்கப் பட்டன.
ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்களின் கோரிக்கைகள்:
தங்களது அடிப்படை கோரிக்கைகளாக எழுத்தாளர்கள் சங்கம் இவற்றை முன்வைத்துள்ளது.
திரைப்பட ஸ்டுடியோக்கள் அடிப்படையாக சில எழுத்தாளர்களை ஒரு குறிபிட்ட காலத்திற்கு பனியில் அமர்த்த வேண்டும்.
தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள்,மற்றும் ஓ.டி.டி யில் தங்கள் பனியாற்றிய நிகழ்ச்சிகள் பெரும் வெற்றிபெற்றால் அதில் சம தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு அளிக்கப் படவேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அமெரிக்க திரைப்படச் எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்தது.