(Source: ECI/ABP News/ABP Majha)
Love Reddy : படத்தைப் பார்த்து வில்லனாக நடித்தவரை அறைந்த பெண்...லவ் ரெட்டி படக்குழுவுக்கு நிகழ்ந்த சோகம்
தெலுங்கில் உருவாகியிருக்கும் லவ் ரெட்டி படத்தின் திரையிடலின்போது பெண் ஒருவர் படத்தில் வில்லனாக நடித்த நடிகரை அறைந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மக்கள் அந்த நடிகரை கொண்டாடுகிறார்கள். அதேபோல ஒரு வில்லன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மக்களுக்கு அந்த நடிகரின் மேலும் ஒரு தங்களை மீறிய ஒரு கோபம் ஏற்பட்டு விடுகிறது . கர்ணன் படத்தில் நட்டி , ஜிகர்தண்டா படத்தில் நவீன் சந்திரா , மகாராஜா படத்தில் சிங்கம் புலி என தங்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்த நடிகர்களை பல ரசிகர்கள் ஃபோன் செய்து திட்டியதாக அவர்களே தெரிவித்துள்ளார்கள். திட்டுவது கூட பரவாயில்லை கோலாரில் பெண் ஒருவர் வில்லனாக நடித்த நடிகரை திரையரங்கில் வைத்து பளார் பளார் என அறைந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லவ் ரெட்டி
ஸ்மரன் ரெட்டி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி வெளியான படம் லவ் ரெட்டி. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் என் டி ராமசாமி நடித்துள்ளார். உண்மை கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. படத்தில் தனது மகளை தான் காதலித்தவனிடம் இருந்து சதி செய்து பிரித்துவிடுகிறார் வில்லன். படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக படக்குழுவினர் கோலர் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்றனர். அப்போது படம் முடிந்து படக்குழுவினர் நின்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் கூட்டத்தில் இருந்து வந்து வில்லன் நடிகர் என்.டி. ராமசாமியை பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார். என்ன நடக்கிறது என அந்த நடிகர் உணர்ந்துகொள்வதற்குள் அந்த பெண் அவரை மேலும் அடிக்கத் தொடங்கினார். இதன் பின் படக்குவினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார்கள். இருந்தாலும் அந்த பெண் எல்லாரையும் மீறி அவரை அடிக்க பாய்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் இந்த அடியை அந்த நடிகர் பாராட்டு என்று எடுத்துக்கொள்வதா இல்லை என்னவாக எடுத்துகொள்வது என கேலி செய்து வருகிறார்கள்.
Appears like cheap promotional tactics from the team of #LoveReddy 😖
— What The Fuss (@WhatTheFuss_) October 25, 2024
Do you people want to paint the audience so dumb.?
The actor in focus NT Ramaswamy should try more natural acting.🙏#lovereddyonoct18
pic.twitter.com/0VruYqVVPV
இன்னும் சில இது படத்தின் ப்ரோமோஷனுக்காக நடத்தப்பட்ட நாடகம் என்றும் தெரிவித்துள்ளார்கள்