Raayan : அஜித்தின் பில்லா 2 படத்தின் ரெக்கார்டை முறியடிக்குமா ராயன்...ரெண்டு படத்திற்கும் என்ன ஒற்றுமை ?
A சான்றிதழ் பெற்ற படங்களில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் அஜித்தின் பில்லா 2 . இந்த ரெக்கார்டை முறியடிக்குமா தனுஷின் ராயன்
ராயன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று ஜூலை 26 ஆம் தேதி வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , அபர்ணா பாலமுரளி , பிரகாஷ ராஜ் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா என இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பட்டியல் நீளமானது.
ஏ சான்றிதழ்
ராயன் படத்திற்கு சென்சார் வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை ஆகிய இரு படங்கள் ஏ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத் தக்கது. ஏ சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதிற்கு குறைவானர்கள் பார்க்க கூடாது எப்பது தான் விதிமுறை. பொதுவாக பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு ஏ சான்றிதழ் கிடைப்பது என்பது அப்படத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு அதை தவிர்க்கவே படக்குழு முயற்சிக்கும். சென்சார் வாரியம் சொல்லும் சில காட்சிகளை நீக்க வேண்டும். அதீதமான வன்முறைக் காட்சிகள் ராயன் படத்தில் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில காட்சிகளை நீக்கினால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குவதாக வாரியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் படத்தின் நீளத்திலோ கதையிலோ படக்குழு எந்த வித சமரசமும் செய்துகொள்ள விரும்பாததால் இறுதியாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் முதல் ஏ சான்றிதழ் பெற்ற படமும் ராயன் தான்.
அஜித்தின் பில்லா 2 சாதனையை முறியடிக்குமா ராயன்?
ராயன் படத்திற்கு முன்பு ஏ சான்றிதழ் பெற்ற பெரிய ஸ்டார் நடித்த படம் என்றால் அஜித்தின் பில்லா 2. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியளவில் 48 கோடி வசூலித்தது. முதல் நாளில் மட்டும் இப்படம் 7.6 கோடி வசூல் செய்தது. ஏ சான்றிதழ் பெற்று அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் பில்லா 2 இன்று வரை முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்போது தனுஷ் நடித்துள்ள ராயன் பில்லா 2 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ராயன் படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் அன்றைய சூழலைக் காட்டிலும் தற்போது தனுஷ் மார்க்கெட் இந்தியளவில் பெரிது என்பதால் அஜித்தின் படத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக வசூலை ராயன் ஈட்டும் என்று எதிர்பார்க்கலாம்.