Manikka Vinayagam: மரகத குரல் கொண்ட மாணிக்க விநாயகத்தின் முத்தான 10 தகவல்கள்!
இவர் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்ம ஸ்ரீ வழுவூர் ராமைய்யா பிள்ளையின் இளைய மகன் ஆவார்.
பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.
1. மாணிக்க விநாயகம் மயிலாடுதுறையில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 78.
2.இவர் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்ம ஸ்ரீ வழுவூர் ராமைய்யா பிள்ளையின் இளைய மகன் ஆவார்.
3.இவரது உறவினர் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் பிரபல இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
4. 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ள கெளுத்தி ’ என்ற பாடலை பாடி தனது திரைவாழ்கையை தொடங்கினார்.
5. 800க்கும் மேற்ப்பட்ட திரைப்பட பாடல்களை பாடிய மாணிக்க விநாயகம் பக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் என 15,0000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
6. ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற கொடுவா மீசை அருவா பார்வை, கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற “விடை கொடு எங்கள் நாடே’ பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற ‘அய்யய்யோ’ தவசி படத்தில் இடம்பெற்ற ‘ஏலே இமயமலை எங்க ஊரு சாமி மலை’ உள்ளிட்ட பல பாடல்கள் மாணிக்க விநாயகத்தின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கின்றன.
7. திருடா, திருடி படத்தில் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் நடிகராக அறிமுகமான மாணிக்க விநாயகம் தொடர்ந்து கம்பீரம், பேரழகன், தில், பருத்தி வீரன், சந்தோஷ் சுப்ரமணியம்,யுத்தம் செய் வேட்டைக்காரன், சிங்கம், உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
8. சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
9. மாணிக்க விநாயகத்துக்கு தனது 50 வயதில்தான் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
10. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான குணச்சித்திர விருதை வாங்கியவர்.
#17YearsOfThirudaThirudi பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய manmadharasa@dhanushkraja @chayasingh16 #Karunas #ManikkaVinayagam #Krishna #MeghnaNair #DelhiGanesh*er Completes 17 Years today💐🎊
— Dhanush Appu Villupuram (@dhanush__appu) September 5, 2020
Music #Dhina
Prod by #IndianTheatreProductions
An @DirectorS_Shiva Directional pic.twitter.com/LXrSMcyTOl
RIP #ManikkaVinayagam sir
— Yoga Kumaran (@yoga_kumaran) December 26, 2021
This song will keep you alive forever. pic.twitter.com/q4tpZv4i34
RIP singer #ManikkaVinayagam
— 😍❤தளபதிகீர்த்தி❤😍 (@Keerthivijay55) December 26, 2021
Miss You Your Voice Sir 💔💔💔😔#Beast #ThalapathyVijay pic.twitter.com/kQDB7f6M66
Rest in Peace!! #ManikkaVinayagam pic.twitter.com/hylDZtShNU
— Nandha (@Nandhaoffl) December 26, 2021
Rip sir #ManikkaVinayagam pic.twitter.com/nK5uei2fQe
— Mohammed Tharik (@Mohamme83456596) December 26, 2021