Leo Kalyan Sonam Kapoor : சோனம் கபூரின் வளைகாப்பில் பாடிய பாடகர்.. ட்ரோல் செய்த நெட்டிசன்கள்.. யார் இந்த லியோ கல்யாண்?
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் லியோ கல்யாண் இருக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும், பலரும் லியோ கல்யாண் மீது தங்கள் வெறுப்பையும் இணையத்தில் கொட்டி வருகின்றனர்.
சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது பாடகர் லியோ கல்யாண் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல்களைப் பாடினார். தன் கணவர் ஆனந்த் அஹுஜாவுடனான தனது முதல் குழந்தையின் வளைகாப்பு நிகழ்ச்சியில் வெகுசில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்ட நிலையில், இவர்களுள் லியோ கல்யாண் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் லியோ கல்யாண் இருக்கும் படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும், பலரும் லியோ கல்யாண் மீது தங்கள் வெறுப்பையும் இணையத்தில் கொட்டி வருகின்றனர்.
பாடகரும், பாடலாசிரியருமான லியோ கல்யாண் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தன்பாலீர்ப்பாளர் கலைஞர் ஆவார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு புதிய பாணியிலான உடைகளை அவர் அணிந்து வெளியிடும் படங்கள் பிரபலமானவை. அதனால் அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 79 ஆயிரம் ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.
தனது 10 வயது முதல் 17 வயது வரை, இருதுருவங்களைப் போல் இருந்த தெற்கு லண்டன், பாகிஸ்தானின் லாகூர் ஆகிய நகரங்களுக்கு இடையில் தனது பதின் வயதுகளைக் கழித்ததாகக் கூறும் லியோ கல்யாண், தான் பாகிஸ்தானில் இருப்பதை விட லண்டனில் இருப்பது எளிதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலிவுட் இசை, மேற்கத்திய கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான ஈர்ப்பு மட்டுமின்றி, லியோ கல்யாண் முறையாக இந்தியப் பாரம்பரிய இசையைக் கற்றவர்.
View this post on Instagram
சமீபத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு நிகழ்ச்சியில், லியோ கல்யாண் தன்னுடைய பாணியில் மசகளி, சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ முதலான பாடல்களைப் பாடி பலரையும் மகிழ்வித்துள்ளார்.
தன் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி பிறர் கொடுக்கும் கமெண்ட்கள் குறித்து பதிவிட்டுள்ள லியோ கல்யாண், `வெறுப்புக் கமெண்ட்கள் என்னை ஒன்றும் செய்வது இல்லை. அவை சிரிப்பை வரவழைப்பதாக இருக்கின்றன.. நான் அவற்றை என் நண்பர்களிடம் காட்டி சிரிப்பது உண்டு. மேலும், வெறுப்பில் வெளியிடப்படும் கமெண்ட்கள் மூலம் நான் சமூகத்தின் இயல்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறேன் என நினைக்கிறேன்.. அப்படியானால் நான் சரியான பாதையில் இருக்கிறேன் என்று பொருள்’ எனக் கூறியுள்ளார்.