Gangubai Kathiawadi : மும்பையின் பெண் தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியாபட்… கங்குபாயின் உண்மைக்கதை இதுதான்!
ஒரு பெண்ணின் உண்மையான வரலாற்றுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில்தான் ஆலியா பட் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையின் பாலியல் தொழில் பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலாச்சிய கங்குபாய் கொத்தேவாலியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகை ஆலியாபட்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான ஆலியா பட், பாலியல் தொழிலாளியாக இருந்து அரசியலில் ஈடுபட்ட பெண்ணின் உண்மைக்கதை குறித்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் 60-களில் மும்பைில் வாழ்ந்த கங்குபாய் கொத்தேவாலியின் வாழ்க்கை வரலாறு தொடர்புடையது. இவர் யார்? எப்படி மும்பையின் காமாட்டிபுராவின் தலைவியான கோலாச்சினார் என இங்கே தெரிந்துகொள்வோம்.
யார் இந்த கங்குபாய்?
மும்பையின் பாதாள உலகமாக செயல்பட்ட மாஃபியா தலைமைகளில் ஒருவராக 60-களில் வலம் வந்தவர் தான் கங்குபாய். இங்குள்ள பாலியல் தகுதி பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலாச்சி நடத்தியர் குஜராத்தில் மாநிலத்தில் பிறந்தவர். இவர் தனது தந்தையிடம் கணக்கராகப் பணியாற்றிவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் மும்பைக்கு வந்தார். கங்குபாய்க்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆசை அளப்பெரிதாக இருந்துள்ளது. இதற்காக பல தேடல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், 500 ரூபாய்க்காக பாலியல் தொழில் செய்வதால் கங்குபாயின் கணவர் விற்றுவிட்டுச் சென்றுவிட்டதாக, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த ஹூசைன் ஜைதி குறிப்பிடுகிறார்.
இது மட்டுமின்றி தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவரைப்பற்றி, குற்றவாளிகளின் முதலாளியாக இருந்த டான் கரீம் லாலாவிடமே முறையிட்டுள்ளார். இதனையடுத்து கங்குபாய் மும்பை தாதா கரீம் லாலாவின் தங்கையாக இருந்து, மும்பை காமாட்டிபுராவையே தனது கைப்பிடிக்குள் வைத்திருந்த பெருமைக்குரியவராக வலம் வந்தார்.
பாலியல் தொழிலாளிகள் ஏரியாவில் இருந்து அரசியல் தலைவியாக உருமாறியது தான் கங்குபாயின் வாழ்க்கை. இக்கதையின் இன்ஸ்பிரேஷனாகத்தான் ஆலியா பட் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இதற்காக மும்பையின் ரெட்லைட் ஏரியாவில் விசிட் செய்து அவர்கள் எப்படி உடை அணிகிறார்கள்? நடை பாவனை எல்லாம் எப்படி உள்ளது முன்னதாக என தெரிந்துகொண்டதாக் கூறப்படுகிறது. இப்படி ஒரு பெண்ணின் உண்மையான வரலாற்றுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் தான் ஆலியா பட் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இப்படத்தில் ட்ரெய்லர் வெளியான நிலையில், கங்குபாயின் குடும்பத்தினர் எப்படி இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நீங்கள் கூற முடியும் எனவும், மும்பையில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் பாடுபட்டவர் இவர்தான் எனவும் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும் இப்படம் வெளியாவதில் காலதாமதம் ஆனது.