The GOAT: விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
The GOAT: 'தி கோட்' படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது பற்றிய அறிவிப்பை இங்கே காணலாம்.
விஜய் நடித்திருக்கும் ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் வரும் 17-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கோட்'. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, அஜ்மல் என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் படத்தி ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். வரும் 17-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
GET . SET . GOat 🔥
— venkat prabhu (@vp_offl) August 15, 2024
Buckle up.. #TheGoatTrailer is landing on your screens on August 17th, 5 PM 💥@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production… pic.twitter.com/Am4OXIlBrK
செப்டம்பர் 5-ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 'தி கோட்' படம் வெளியாக இருக்கிறது. கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் நடித்துள்ளார். நடிகை சினேகா, த்ரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ளது.
தி கோட்:
விஜய்யின் 68வது படமாக தயாரித்துள்ள 'கோட்' ('தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்') படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் கோட் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படத்தின் விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. கூடுதலாக ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது. படத்தின் டிரைலர் கூட இதுவரையில் வெளியாகாதது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால், இப்போது 17-ம் தேதி வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பாடல்கள் ரசிகர்களிடையே கலவையாக விமர்சனங்களை பெற்றுள்ளது.