Cinema Headlines: இந்தியன் 2 படம் எப்போது ரிலீஸ்? அட்ஜஸ்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்- சினிமா தலைப்புச் செய்திகள்!
Cinema Headlines: இன்றைய சினிமா உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
Indian 2: இந்தியன் 2 படம் எப்போது ரிலீஸ்? தீவிர ஆலோசனையில் படக்குழு!
ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஏற்கனவே ஸ்டார், தங்கலான், விஷால் நடித்திருக்கும் ரத்னம் மற்றும் பாலா இயக்கியிருக்கும் வணங்கான் உள்ளிட்டப் படங்கள் நிலுவையில் இருக்கின்றன. இப்படியான நிலையில் இந்தப் படங்களுடனான போட்டியை தவிர்க்கும் பொருட்டு இந்தியன் 2 படத்தை மே அல்லது ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
Ankita Lokhande: அட்ஜஸ்ட் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. பிரபல நடிகை குற்றச்சாட்டால் பரபரப்பு
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பங்கேற்ற அங்கிதா லோகாண்டே 3வது இடத்தைப் பிடித்தார். இப்படியான நிலையில் சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் அங்கிதா, சில ஆண்டுகளுக்கு டிவி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் மும்பையில் வாய்ப்பு தேடி வந்துள்ளார். அப்போது ஒரு படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார். மேலும் ஒரு படத்தின் ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் தயாரிப்பாளர் தன்னை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார் என அங்கிதா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
HBD Varalaxmi : மணப்பெண்ணாக பிறந்தநாள் கொண்டாடும் வரலட்சுமி சரத்குமார் ! குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கும் அவரின் முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாரின் 39வது பிறந்தநாள் இன்று. மேலும் படிக்க
Chaya Devi: நடிகையாக அறிமுகமாகும் சரத்குமாரின் முன்னாள் மனைவி - என்ன படம் தெரியுமா?
பிரிந்தாலும் முதல் மனைவி குடும்பத்துடன் சரத்குமார் நல்லுறவை பேணி வருகிறார். இந்நிலையில் முதல் மனைவி சாயா தேவி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தில் தான் அவர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இதனிடையே இந்த படத்தில் நடிக்க எனக்கு முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்னுடைய மகள் வரலட்சுமி கொடுத்த உற்சாகத்தால் வணங்கான் படத்தில் நடித்தேன் என்று சாயா தேவி கூறியுள்ளார்.மேலும் படிக்க
Manjummel Boys: குணா படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? மஞ்சுமெல் பாய்ஸ் குழுவிடம் பகிர்ந்த உலக நாயகன்!
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சுமெல் பாய்ஸ் . பிரேமப் படத்தைத் தொடர்ந்து பெரும் திரளாக தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாடும் படமாக மாறியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் கமல்ஹாசனின் குணா படம். மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவும் நடிகர் கமல்ஹாசனும் சந்தித்து கொண்டு உரையாடியுள்ள வீடியோவை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. குணா குகைப் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.மேலும் படிக்க