Throwback: கர்ப்பப்பை பிரச்னை.. பிளாஸ்டிக் சர்ஜரி.. வரிசை கட்டிய விமர்சனங்கள்.. இன்ஸ்டா பதிவுகளால் வாயை மூடவைத்த ஸ்ருதி..
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதிஹாசனுக்கு எதிராக விமர்சனங்கள் பல வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கு அவர் பதிவிட்ட பதிவை இங்கே காணலாம்.
அண்மையில் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்த பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், அது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும் அதனை உறுதியாக எதிர்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அந்தப்பதிவு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முன்னதாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் பதிவிட்ட பதிவை ஒரு த்ரோபேக் கட்டுரையாக பார்க்கலாம்.
அவர் பதிவிட்டிருந்த அந்தப்பதிவில், “ பிரபலமானவர்களோ அல்லது சாதரணமானவர்களோ அவர்களுக்கு மற்றவர்களை எப்போதும் மதிப்பிடும் உரிமை கிடையாது. இதை அவ்வளவு சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது என் முகம் என் வாழ்கை என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன். அதை வெளிப்படுத்திக்கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் கிடையாது.
இதை நான் விளம்பரபடுத்துகிறேனே என்றால், இல்லை... சரி நான் இதற்கு எதிரானவாளா என்றால் அதற்கும் பதில் இல்லை என்பதுதான். இது நான் எனது வாழ்கையை எப்படி தேர்ந்தெடுக்கிறேன் என்பது பற்றியது. நாம் நமக்கோ அல்லது பிறருக்கோ செய்யும் உதவி என்ன என்று என்னைக் கேட்டால், உடல் மற்றும் மனதின் மாற்றங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது. அன்பைப் பரப்புங்கள் மற்றும் நிதானமாக இருங்கள்.” என்று பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால், பாதிக்கப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் பதிவிட்ட பதிவு, “ நான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வளர்சிதை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்வது உண்மையில் கடினமான போராட்டம் என்பது பெண்ணுக்குத் தெரியும். ஆனால் இதை நான் போராட்டமாக பார்க்கவில்லை. மாறாக எனது உடலின் இயற்கையான நிகழ்வு என்பதை புரிந்து கொண்டு அதை ஏற்க தயாராகி விட்டேன்.
எனது உடல் முடிந்த மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. சரியாக சாப்பிடுவதற்காக, நன்றாக தூங்குவதற்காக, முறையாக வொர்க் அவுட் செய்வதற்காக அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னுடைய உடல் தற்போது ஒழுங்காக இல்லைதான். ஆனால் என்னுடைய உள்ளம் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் ஓடட்டும்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram