ரூ.40 கோடி டீல் பேசிய நெட்ஃபிளிக்ஸ்.! குறுக்கே நின்ற மம்முட்டி.. நோ சொன்ன துல்கர்!
நெட் ப்ளிக்ஸ் உடனான குருப் படத்தின் ஒப்பந்தத்தை மம்முட்டி வேண்டாம் என்று சொன்னதால் குருப் படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் குருப். இந்தத்திரைப்படத்தை 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கர் சல்மானை திரையுலத்திற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். குருப் திரைப்படம் சுகுமார் குருப் என்ற குற்றவாளியின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தனது இன்சுரன்ஸ் பணத்தை பெறுவதற்காக குருப் தான் இறந்து விட்டதாக நாடமாட, தனக்கு பதிலாக சாக்கோ என்பவரை காரில் வைத்து எரித்து கொன்றான். போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது. இதனிடையே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற குருப் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. 1984 ஆம் ஆண்டு கேரளாவையே உலுக்கிய இந்த கொலைவழக்கை மையப்படுத்திதான் இந்தத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மொழிகளில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக குருப் திரைப்படத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் வெளியீட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே சென்றது. இதனால் கடந்த ஒரு வருடமாக படம் வெளியாகமலே இருந்தது. இந்த நிலையில்தான் பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் குருப் படத்தை 40 கோடிக்கு வாங்க முன் வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில்தான் துல்கர் சல்மானின் தந்தையான மம்முட்டி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து திருப்தி அடைந்த மம்முட்டி, படத்தை ஓடிடிக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திரையரங்குகளில் வெளியீடுமாறும் ஆலோசனை கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தப்படத்தை தற்போது திரையரங்குகளில் வெளியிட்டால் இதில் கிடைக்கும் லாபம் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் உதவிகரமாகஇருக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்துதான் துல்கர் சல்மான் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார். இதன் தமிழ் வெளியீடு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. முன்னதாக மலையாளத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளியான படங்கள் சரியாக போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படி இருக்க, மலையாள முன்னணி நடிகருமான மோகன்லால் தனது 5 படங்களை ஒடிடியில் ரீலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் ஒடிடியின் நாயகனாகவே மாறியுள்ளார் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இதுக்குறித்து ஆசிர்வாத் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் தெரிவிக்கையில், மோகன்லாலின் Bro Daddy, 12th Man, Alone உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட 21 நாள்கள் கழித்து ஓடிடியில் வெளியிட அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை 80 தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டதாகவும் மற்றவர்கள் இதனை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தியேட்டரில் இனி படங்களை வெளியிடவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.