Watch Video: சர்தாராக அவதாரம் எடுக்கும் கார்த்தி... படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சர்தார் 2
பி. எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார் . இப்படத்தில் கார்த்தி தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். ரஜிஷா விஜயன் , லைலா , ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவான இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
சர்தார் 2 படத்திற்கான பூஜை கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று ஜூன் 15 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பாக எஸ். லக்ஷ்மணன் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக கார்த்தி நடித்த தேவ் , சர்தார் முதல் பாகத்தை தயாரித்துள்ளார்.
சர்தார் 2 மேக்கிங் வீடியோ
சர்தார் 2 படத்தில் கார்த்தி வயதான கதாபாத்திரத்திற்கு மேக் அப் போட்டு ரெடியாகும் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கார்த்தி நடித்து வரும் படங்கள்
கார்த்தி தற்போது பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா , அரவிந்த் சாமி , ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்து ரிலீஸூக்கு தயாராகி வரும் மற்றொரு படம் வா வாத்தியார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு படங்களிலேயே பெருமளவிலான ரசிகர்களை கவர்ந்த நலன் குமாரசாமி கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை இயக்குகிறார். இதனால் வா வாத்தியாரே படத்தில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. சத்யராஜ் , க்ரித்தி ஷெட்டி , ராஜ்கிரண் , ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயாணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியோடு நிறைவடை இருக்கிறது.
Sardar 2 SHOOT BEGINS ⚡🎬
— Vanthiyathevan_Da🔥🌟 (@KavinKfc) July 15, 2024
Karthi - P.S.Mithran ~ Yuvan 🔥@Karthi_Offl | #Sardar2 pic.twitter.com/qHYVJLR2UB
இந்த இரு படங்கள் தவிர்த்து டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் கார்த்தியின் 29 ஆவது படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கார்த்தி ரசிகர்களுக்கு இந்த ஆண்டும் சரி அடுத்த ஆண்டும் சரி அடுத்த படங்கள் கார்த்திருக்கின்றன.