மேலும் அறிய

அமீர்கான் விருந்திலும் சமந்தா இல்லை.. மீண்டும் சமந்தா, சைதன்யாவிடம் கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்ஸ்..

லவ் ஸ்டோரி பட ப்ரோமோஷனுக்கு ஹைதராபாத் வந்த அமீர்கானுக்கு அளித்த விருந்தில் சமந்தா இல்லாத புகைப்படங்கள் வைரல் ஆகின்றன.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதைத்  தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். அதனை சமீபத்தில் ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இப்பட விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு , பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய விருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

அமீர்கான் விருந்திலும் சமந்தா இல்லை.. மீண்டும் சமந்தா, சைதன்யாவிடம் கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்ஸ்..

மேலும் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி  பிறந்தநாள் கொண்டாடிய நாகர்ஜூனாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் நடிகை சமந்தா கலந்து கொள்ளாததும், நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றபோது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர்,  "கோவிலுக்கு வந்து இதை  கேட்கிறீர்களே.... புத்தி இருக்கா" என மிகவும் கோபத்துடன் கேட்டதும் விவாகரத்து ஆகப்போகிறதென்ற செய்திகளுக்கு வலு சேர்த்தன. என்னதான் ஊடகங்கள் செய்தி பரப்பினாலும் தற்போது வரை சம்பந்தப்பட்ட சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

தற்போது, ​​சைதன்யா சாய் பல்லவியுடன் நடித்த லவ் ஸ்டோரி படம் ஹிட் ஆனதை தொடர்ந்து. பாலிவுட் நடிகரும், நாக சைதன்யாவின் லால் சிங் சத்தாவில் அவருடன் நடிக்கும் நடிகருமான அமீர்கான் சமீபத்தில் படத்தின் விளம்பர பணிகளுக்காக ஐதராபாத் சென்றார். நாக சைதன்யாவும் அவரது தந்தை நாகார்ஜுனாவும், அமீர்கானுக்கு இரவு விருந்து அளித்தனர். இந்த இரவு உணவு விருந்தின் பல படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அதில் சமந்தா இல்லாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமந்தா, இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்து விட்டார்கள் என்ற வதந்தியை இந்த விருந்து மேலும் பெரிதாக்கியுள்ளது.

அமீர்கான் விருந்திலும் சமந்தா இல்லை.. மீண்டும் சமந்தா, சைதன்யாவிடம் கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்ஸ்..

இதற்கிடையில், அமீர்கானுடனான இரவு உணவின் போது நாகார்ஜுனா எமோஷனல் ஆனதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உரையாடலின்போது படத்தில் சைதன்யாவின் கதாபாத்திரத்திற்கு பால ராஜு என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தனர். இதே பெயரில் நாகார்ஜுனாவும் ஒரு பிரபலமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், அவர் மிகவும் எமோஷனாக இதனை கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில், ஒரு சமீபத்திய பேட்டியில், சமந்தாவை பிரிகிறாரா என சைதன்யாவிடம் (Naga Chaitanya) கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே, நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவும், தொழில் வாழ்க்கையை தொழில் ரீதியாகவும் வைத்திருக்கிறேன். நான் இரண்டையும் கலந்ததில்லை. நான் வளரும்போது என் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டது இந்த பழக்கம். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் எப்போதும் வேலையைப் பற்றி பேசியது இல்லை. வேலைக்குச் சென்றபோது, ​​தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியதில்லை. அவர்கள் பராமரித்த ஒரு மிகச்சிறந்த சமநிலை இது" என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget