Kangana Ranaut : “வீட்டில் நுழைபவர்கள் சுடப்படுவீர்கள்” .. கங்கனா வீட்டில் மாட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி..!
தனது வீட்டிற்கு அத்துமீறி நுழைபவர்கள் சுடப்படுவார்காள் என நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது வீட்டிற்கு அத்துமீறி நுழைபவர்கள் சுடப்படுவார்காள் என நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் “தாம் தூம்”. இந்த படத்தின் மூலம் நடிகையாக கங்கனா ரணாவத் தமிழில் அறிமுகமானார். முன்னதாக 2006 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். தமிழை விட பாலிவுட் திரையுலகம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது.
தொடந்து பல பாலிவுட் படங்களில் நடித்த கங்கனா 2021 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடித்து அசத்தினார். மேலும் கங்கனா தற்போது எமர்ஜென்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக வரும் அவரின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது. நடிகையாக மட்டுமல்லாமல் எமர்ஜென்சி படத்தின் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கங்கனா பணியாற்றியுள்ளார். அதேசமயம் தமிழில் சந்திரமுகி 2 படத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார்.
நிலைமை இப்படியிருக்கையில் கங்கனா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து விமர்சனங்களை சந்திப்பது வழக்கம். குறிப்பாக இதனிடையே கங்கனாவுக்கு மும்பை மற்றும் மணாலியில் வீடு உள்ளது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு அவர் பேசியிருந்தார். இதனால் கடுப்பான அப்போதைய சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக சஞ்சய் ராவத் - கங்கனா இடையே வார்த்தைப் போர் வெடித்தது.
இதன் ஒரு பகுதியாக பாந்த்ரா பகுதியில் கங்கனா சட்டவிரோதமாக வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்து நடவடிக்கை எடுத்தது.இதனைத் தொடர்ந்து கங்கனா நீதிமன்றம் வரை சென்றார். இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் மீண்டும் பாஜக ஆட்சி இருப்பதால் கங்கனா தனது வீட்டை புதுப்பிக்க தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள கங்கனா வீட்டில் ஒரு போர்டு மாட்டப்பட்டுள்ளது.
அதில் யாரும் அத்துமீறி உள்ளே நுழையக்கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள். தப்பித்தால் மீண்டும் சுடப்படுவீர்கள் எனவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு பாலிவுட் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.