‛வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம்’ தல அஜித்தை பின்பற்றும் விருதுநகர் கலெக்டர்!
அஜித் மீதான ஐஏஎஸ் அதிகாரியின் இந்த காதல், அவரின் நேர்மைக்கு ரோல்மாடலாக எடுத்துச் செல்வதாக விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
‛தல‛ அஜித்திற்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு என்று அனைவரும் அறிந்ததே, ஒவ்வொரு மட்டத்திலும் அவருக்கான ரசிகர்கள் அவருக்காக எதையும் செய்யும் மனநிலை கொண்டவர்களாக வெளிப்படுகின்றனர். தனி ஆளாக சினிமாத்துறையில் போராடி வெற்றி பெற்ற அஜித்குமாரின் செல்வாக்கு, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என்கிற பட்டம்.
அஜித்திற்கு பல பாலோவர்ஸ் இருப்பது தெரியும். பலர் வெளிப்படையாக அதை கூறுவதுண்டு. சிலர் அதை மறைமுகமாக வைத்துக் கொள்வதுண்டு. இங்கே நாம் பார்க்க இருப்பவர், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் தான். ஆனால், அவரும் சாதாரண ஆள் இல்லை. ஒரு மாவட்டத்தை கட்டிக்காக்கும் மாவட்ட ஆட்சியர் என்றால் நம்ப முடிகிறா... அவர் தான் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி.
— Meghanath Reddy J (@jmeghanathreddy) November 10, 2021
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லேபிளில் நடிகர் அஜித் போட்டோவை தான் அவர் வைத்துள்ளார். சமீபத்தில் பைக்கில் வலம் வரும் அஜித், பாலைவனம் ஒன்றில் பைக் மீது சாய்ந்து தண்ணீர் குடிக்கும் போட்டோ வைரலானது. கடும் உழைப்பு, பந்தா இல்லாத பணிவு என்றெல்லாம் அந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். அந்த போட்டோவை தான் மேகநாத ரெட்டி. தன்னுடைய ட்விட்டர் லெபிளாக வைத்துள்ளார்.
சரி போட்டோ வைத்தால் ரசிகர் ஆகிவிடுவாரா... என்று நீங்கள் கேட்கலாம். அங்கே தான் ட்விஸ்ட். தன்னுடைய ப்ரொபைலில் அவர் எழுதியுள்ள வாசகம் தான் அவரை அக்மார்க் அஜித் ரசிகராக அடையாளப்படுத்தியிருக்கிறது. தான் ஒரு தந்தை அப்புறம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அதன் பின்பாக, ‛வாழு வழவிடு அவ்வளோ தான் தத்துவம்’ என்கிற வலிமை படத்தின் பாடல் வரிகளை எழுதியுள்ளார் மேகநாத ரெட்டி.ஐஏஎஸ்.
Happy Birthday to the Phenomenon called THALA and a Phenomenal person called AJITH KUMAR #HappyBirthdayThalaAjith #Thala #Inspiration pic.twitter.com/m8FLmySl0x
— Meghanath Reddy J (@jmeghanathreddy) May 1, 2019
அதுமட்டுமல்லாமல், அவர் தனக்கு வரும் பதிவுகளுக்கு அஜித் தொடர்பான ஜிப் பைல்களை பதிலிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அஜித் மீதான ஐஏஎஸ் அதிகாரியின் இந்த காதல், அவரின் நேர்மைக்கு ரோல்மாடலாக எடுத்துச் செல்வதாக விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.