மேலும் அறிய

Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உதவ மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உதவ மறுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அமித்ஷா என பலரும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து பரப்புரை மேற்கொண்டனர். 

இதனிடையே ராகுல்காந்தி பற்றி பாஜக ஆதவாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டார். அதில், ”யூட்யூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் பெரியதம்பியின் உடல்நல பாதிப்புக்கு உதவுமாறு நெல்லைக்கு வந்த ராகுல் காந்தியிடம் கேட்டபோது அவர் மறுத்து விட்டதாகவும், இதனால் அந்த சேனலை சார்ந்தவர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலுக்காக எங்களை பயன்படுத்தி விட்டு, நாங்கள் வெளிநாடு செல்ல உதவுகிறேன் என ராகுல்காந்தி சொன்னார். ஆனால் இன்றைக்கு பணம் கூட கேட்கவில்லை. நவீன மருத்துவ வசதிகள் தான் செய்து தருமாறு கேட்கிறோம். ஆனால் அதை நிராகரித்து விட்டார்கள்” என கூறப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனடியாக வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், ”இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!” என அந்த சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி வில்லேஜ் குக்கிங் சேனலில் இருப்பவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Embed widget