Cobra Movie Release Date: விக்ரமின் கோப்ரா படத்தின் ரீலிஸ் எப்போது? ரசிகர்களின் கேள்விக்கு தேதியை அறிவித்த இயக்குநர்!
லலித் குமாரின் 7 ஸ்கீரின் தயாரிக்கும் சீயான் விக்ரமனின் கோப்ரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
![Cobra Movie Release Date: விக்ரமின் கோப்ரா படத்தின் ரீலிஸ் எப்போது? ரசிகர்களின் கேள்விக்கு தேதியை அறிவித்த இயக்குநர்! vikram cobra film release date officially announce by director Cobra Movie Release Date: விக்ரமின் கோப்ரா படத்தின் ரீலிஸ் எப்போது? ரசிகர்களின் கேள்விக்கு தேதியை அறிவித்த இயக்குநர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/1678dd947226fa0c33c41b9356cd6301_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சீயான் விக்ரமனின் கோப்ரா படம் வருகின்ற மே 26 ஆம் தேதி ரீலிஸ் ஆகவுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து டிவிட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் சீயான் விக்ரம். புதிய மன்னர்கள், மீரா, என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை போன்ற படங்களில் தனது நடிப்பைத் தொடங்கியிருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் தான் மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். இதனையடுத்து தூள், காசி,சாமி , அந்நியன், ஐ, தெய்வதிருமகள், 10 எண்றதுக்குள்ள என சீயான் விக்ரம் நடித்த படங்களை அடிக்கிக்கொண்டே போகாலம். இதோடு தனது ஒவ்வொரு படத்திற்கும் என்ன மாதிரியான உடல் வடிவமைப்பு தேவை என இயக்குநர்கள் கூறுகிறார்களோ, அதற்கேற்ப உடல் வடிவமைப்பு மாற்றி நடிக்கும் வல்லமை பெற்றவர் தான் விக்ரம்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விக்ரமன் நடித்த படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில் தான், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் நடித்த மகான் படம் வெளியனது. காந்தியக்கொள்கையில் பிறந்த ஒருவரின் வாழ்வு கலாச்சார சீரழிவினால் பாதிக்கப்படுகிறது என்பதை மையக் கருவாக வைத்து சமீபத்தில் இப்படம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சுமார் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லரில் நடிக்கும் இவர் கணித மேதை கணிதவியலாளராகவும், மாறுவேடத்தில் கலைநயமிக்கவராகவும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிகா, ஷாஜி சென் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதோடு கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்திருக்கிறார். லலித் குமாரின் 7 ஸ்கீரின் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு..இன்னும் #Cobra
— SENTHIL MARELEY (@smc_styles) February 24, 2022
"Release Date" தான் வராம
இருக்கு சீக்கிரமா அடுத்த அனௌன்ஸ்மென்ட் விடுங்க
பா ...😔💔@AjayGnanamuthu @7screenstudio @RamVJ2412 @mugeshsharmaa pic.twitter.com/TTQEQecFhF
IT’S A WRAP!! Close to 3 years of filming comes to an end!! My sincere thanks to #ChiyaanVikram sir ❤️ and my entire team who trusted me, sailed through all the struggles and difficult times with me and believed in the vision of #Cobra !! Forever indebted to each one of u! 🤗🤗❤️ pic.twitter.com/NeJIEt4Rdx
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 15, 2022
மாறுபட்ட கதையம்சத்தைக் கொண்ட இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் இதற்கான தேதி எப்போது? என வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தான் ரசிகர் ஒருவர் எப்போது கோப்ரா ரீலிஸ்? என டிவிட்டரில் கேட்க, அதற்கு இன்னும் 3 மாதத்தில் அதாவது மே 26 ஆம் தேதி வெளியாகும் எனவும், இதற்கான பணிகள் நடைபெற்றுவதாகவும் பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)