Vikram Actress Gayathrie: கணவர்களுக்கும் தனக்கும் ராசியில்லை - ‘விக்ரம்’ நடிகை காயத்ரி
படத்தில் முக்கிய கேரக்டராக நடித்த ஃபஹத் பாசில் (அமரின் அப்பாவி காதலியாக) காதலியாக அவர் நடித்தார்.
'விக்ரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காயத்ரி கணவர்களுக்கும் தனக்கும் ராசியில்லை என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமானது கடந்த வாரம் வெளியான 'விக்ரம்'. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மற்றும் சூர்யா ஆகியோரின் நடிப்பிற்காக மட்டும் படம் பாராட்டைப் பெறவில்லை. மற்ற நடிகர்கள் தங்கள் குறிப்பிட்ட காட்சிகளில் பெரிய ஸ்கோர் செய்துள்ளனர்.
அப்பாவி காதலியாக
பிரபல நடிகை எஸ்.காயத்ரிக்கு பெண் பிரதிநிதித்துவத்தைப் பொருத்தவரை 'விக்ரம்' படத்தில் மிகச்சிறப்பான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய கேரக்டராக நடித்த ஃபஹத் பாசில் (அமரின் அப்பாவி காதலியாக) காதலியாக அவர் நடித்தார். இரண்டு பேருக்கு இடையிலான அழகான காதல் படத்தில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது.
இதற்கிடையில், ட்விட்டரில் ஒருவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில், காயத்ரி தனது வருங்கால கணவர் (விஜய் சேதுபதி) மறதி நோயால் தன்னை தற்காலிகமாக மறந்துவிட்டார் என்பதை கடைசி வரை அறியவில்லை என்று சுட்டிக்காட்டினார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்தார். அதில் தனது கணவர் திருநங்கை என்பது தனக்குத் தெரியாது என்றும், தற்போது 'விக்ரம்' படத்தில் தனது கணவர் ஃபஹத் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இறந்து போனதாகவும் அவர் கூறினார்.
கணவர்களுடன் ராசியில்லை
இன்றுவரை அவரது மூன்று சிறந்த படங்களில் அவரது கதாபாத்திரங்களில் உள்ள ஒற்றுமைகளுக்கு பதிலளித்த காயத்ரி, கணவர்களுக்கும் தனக்கும் ராசியில்லை என்று நகைச்சுவையாக கூறினார். அவரது பதிவுக்கு நல்ல எண்ணிக்கையிலான லைக்குகள் மற்றும் ரீட்வீட்கள் கிடைத்துள்ளன.
Literally Me pic.twitter.com/sPlbL7oDum
— Shittier Tamil Movie Details (@TamilDetails) June 5, 2022
‘மாமனிதன்’, ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’, ‘பகீரா’, ‘காயல்’, சீனு ராமசாமி இயக்கிய ‘இடி முழக்கம்’ ஆகிய படங்களில் காயத்ரி நடித்துள்ளார். இதில் சில படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்