மேலும் அறிய

36 years of Poonthotta Kaavalkaaran : நீ எங்கள் நெஞ்சத்தில்.. 175 நாட்கள் ஓடிய விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் ரிலீஸ்!

36 years of Poonthotta Kaavalkaaran : விஜயகாந்தின் 'பூந்தோட்ட காவல்காரன்' படம் பல தடைகளையும் கடந்து எப்படி வெற்றி பெற்றது வாங்க பாப்போம்.

தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் பல தடை தடங்கல்களுக்கு பிறகு ட்விஸ்ட் கொடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கத்தில் வெளியான 'பூந்தோட்ட காவல்காரன்' திரைப்படம்.

ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட சிக்கல்களை சமாளித்து 1988ம் ஆண்டு வெளியாகி  175 நாட்கள் வரை திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளியான நாள் இன்று. விஜயகாந்த் எப்படி துணிச்சலுடன் அந்த சிக்கல்களை சமாளித்தார் பார்க்கலாமா?

36 years of Poonthotta Kaavalkaaran : நீ எங்கள் நெஞ்சத்தில்.. 175 நாட்கள் ஓடிய விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் ரிலீஸ்!

எஸ்.ஏ. சந்திரசேகரிடன் இணை இயக்குநராக பல வெற்றி படங்களில் பணிபுரிந்து வந்த செந்தில்நாதனுடன் விஜயகாந்துக்கு நல்ல ஒரு பழக்கம் இருந்து வந்தது. அவராகவே பலரிடமும் செந்தில்நாதன் இயக்குவதாக இருந்தால் அவருக்கு நான் டேட்ஸ் கொடுக்க தயார் என பலரிடமும் கூறியுள்ளார். இந்த தகவல் செந்தில்நாதனை தவிர சினிமா வட்டாரத்துக்குள் இருக்கும் மற்றவர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது.

ஒரு நாள் இது செந்தில்நாதன் காதுகளுக்குப்போக அவர் நேரடியாகவே விஜயகாந்தை சந்தித்து இந்த தகவல் உண்மைதானா என விசாரித்துள்ளார்.

அப்போது விஜயகாந்த் ஆமாம் நான் உங்களுக்கு டேட்ஸ் கொடுக்க தயார். பாம்குரோவ் ஹோட்டலில் ரூம் போட்டு தருகிறேன். நீங்கள் லைன் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க உடனே ஷூட்டிக் ஆரம்பித்துவிடலாம் என கூறியுள்ளார். 

ஒரு நாள் 'காலையும் நீயே மாலையும் நீ' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜயகாந்துக்கு கண்ணில் அடிபட்டுவிட்டதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் செந்தில்நாதனுக்கு தகவல் வருகிறது. அவர் விஜயகாந்த்தை பார்க்க செல்கிறார். அந்த சமயத்தில் ராவுத்தர் செந்தில்நாதனிடம் இந்த படத்தை ட்ராப் செய்துவிடலாம். சகுணம் சரியில்லை. இந்த படத்தின் வேலை ஆரம்பித்தவுடனே விஜிக்கு இப்படி அடிபட்டு விட்டது. அதனால் நீங்கள்  ரூமை காலி செய்து விடுங்கள் என சொல்லிவிடுகிறார். 

36 years of Poonthotta Kaavalkaaran : நீ எங்கள் நெஞ்சத்தில்.. 175 நாட்கள் ஓடிய விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் ரிலீஸ்!

ஆனால் இந்த தகவல் அறிந்த விஜயகாந்த், என் கண்ணில் அடிபட்டதுக்கு அந்த படம் எப்படி காரணமாகும். நான் இன்னும் சில நாட்களில் சரியாகிவிடுவேன். நாம ஷூட்டிங் ஆரம்பித்துவிடலாம் என்றாராம் விஜயகாந்த். நடிகர்கள் அனைவரையும் தேர்ந்து எடுத்தாச்சு ஆனால் காதலர்களாக நடிக்க அந்த பெண் மட்டுமே கிடைக்கவில்லை. ஷூட்டிங் துவங்க கடைசி 15 நாட்களுக்கு முன்னர்தான் வாணி விஸ்வநாத்தை தேர்வு செய்தார்கள். 

ஒரு வழியாக படத்தின் ஷூட்டிங் ஜனவரி 1-ஆம் தேதி துவங்கியது. படத்தை ஒரே மாதத்தில் முடித்து வெளியிட திட்டமிடப்பட்டது. அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு இறுதியாக காதலர்களாக நடித்த ஆனந்த் மற்றும் வாணி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதற்காக ஊட்டிக்கு சென்றோம்.

அங்கு ஆனந்துக்கு எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டு இரண்டு மாதங்கள் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. 

இதில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்னர் காபி பார்க்க இளையராஜா உடன் இயக்குநர் ஒருவரும் சென்றுள்ளார். அவர் படம் சரியாக வரவில்லை என சொல்லவும் அது அப்படியே பரவி படம் சரியாக வரவில்லை அதை ரீ ரெக்கார்டிங் அனுப்பி மேலும் பணத்தை வீணடிக்க வேண்டாம் அப்படியே வைத்து விடலாம் என கூறியுள்ளனர். இந்த படத்தை வாங்கிய திருச்சி விநியோகஸ்தர் அடைக்கலராஜுக்கு தெரிய வர அவர் பணத்தை திருப்பி கேட்க துவங்கிவிட்டார். 

செந்தில்நாதன் முதல் படமே சொதப்பியது என அவருக்கு பட்டம் கட்டிவிட்டனர். விஜயகாந்த் இளையராஜாவிடம் சென்று கோபமாக பேசி படத்தை பாதியிலே நிறுத்திவிட்டனர். பின்னர் அந்த படத்தை கொண்டு வர சொல்லி எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது ரீ ரெக்கார்டிங் அனுப்பலாம் என முடிவு செய்து அனுப்பி வைத்தார் விஜயகாந்த். 

36 years of Poonthotta Kaavalkaaran : நீ எங்கள் நெஞ்சத்தில்.. 175 நாட்கள் ஓடிய விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் ரிலீஸ்!

படம் விநியோகஸ்தகளுக்கு திரையிடப்படுகிறது. விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் அதில் கலந்து கொள்ளவில்லை. படம் சரியாக வரவில்லை அதை ஏன் நேரடியாக பார்த்து மனசு கஷ்டப்பட வேண்டும் என அவர்கள் செல்லவில்லை. செந்தில்நாதனும் உள்ளே செல்லாமல் வெளியில் அமர்ந்துள்ளார்.

இடைவேளை வரை எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. படம் முடிந்த பிறகு அனைவரும் செந்தில் நாதனை தேடி ஓடுகிறார்கள். என்ன அருமையா படம் பண்ணி இருக்க. விஜயகாந்த் எப்படி நடித்து இருக்கிறார். என ஆஹா ஓஹோ என பாராட்டுக்கள் குவிந்துள்ளது. இந்த தகவல் அறிந்த விஜயகாந்த் மற்றும் ராவுத்தர் பின்னர் படத்தை வந்த பார்த்தனர். இவ்வளவு நன்றாக வந்து இருக்கிறது. இதை போய் நல்லாவே இல்லை என்று சொல்லி விட்டார்களே என வருத்தப்பட்டுள்ளார்.

இப்படியாக 'பூந்தோட்ட காவல்காரன்' திரைப்படம் பல சிக்கல்களை கடந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததற்கு முக்கியமான காரணம் இளையராஜாவின் இசை என்றால் அது மிகையல்ல. விஜயகாந்த் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget