Pavithra | சீரியலுக்கு முழுக்கு.. இனி சினிமாதான்.. வெள்ளித்திரை செல்லும் விஜய் டிவி நடிகை!!
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த விஜய் டிவி நடிகை வெள்ளித்திரைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக இருந்து வந்தது. ஆனால் அண்மைக் காலமாக இந்த நடைமுறையை மாற்றி எழுதியிருக்கிறது சமூகவலைதளஙளும் சின்னத்திரையும்.
சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வெள்ளிதிரைக்கு செல்பவர்கள் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் சின்னத்திரையில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் வரும் பிரபலங்கள் பலர் வெள்ளித்திரைக்கு நுழைவது வாடிக்கையான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அதற்கு உதாரணம்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. காமெடியும், சமையலும் கலந்து வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின், புகழ், ஷிவாங்கி என பலரும் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளனர்
அதே போல விஜய் டிவியில் வெளியான மக்களின் வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்பிரியாவும் திரைத்துறைக்கு செல்வதால் அவருக்கு பதிலாக புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த வரிசையில் விஜய் டிவியின் மற்றொரு கதாநாயகியும் திரைத்துறைக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யார் அவர் என்று கேட்கிறீர்களா.. அவர் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரின் கதாநாயகி பவித்ரா.
முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பகல் நிலவு, மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி,ஆபீஸ், கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்த பிரபலமடைந்தார். இவர் நடித்த ஈரமான ரோஜாவே தொடர் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 800 எபிசோடுகளை கடந்த இந்தத் தொடர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்துதான் அவர் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் நடித்து வருகிறார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, ஆபீஸ், மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தார்.மேலும் ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. மேலும் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் தற்போது வெள்ளித்திரைக்கு செல்ல இருப்பதாக பிரபல பி.ஆர்.ஓ ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Making a Interesting ,Successive & Impressive Mark in Small Screen #AzhagiyaThendral #அழகியதென்றல் #பவித்ரா #Pavithra heading into Big screen Details Soon..
— Nikil Murukan (@onlynikil) November 6, 2021
Best Wishes….@pavithra.janani@onlynikil #NM pic.twitter.com/xWdeu4PyfH