முடிவடைய போகிறதா குக் வித் கோமாளி? ஜெயிக்கப் போவது யாரு? பைனல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்!
குக் வித் கோமாளி3 யில் கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்துக் கொண்டு உள்ளார்கள்.
View this post on Instagram
இந்தநிலையில், குக் வித் கோமாளி சீசனுக்கான ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டது. அந்த ப்ரோமோ வெங்கடேஷ் பட் குரலில் தொடங்க, இந்த வாரத்திற்க்கான டாஸ்க் "அன்யூஸ்வல் இன்கிரீடியன்ஸ் காம்போ சேலஞ்ச் என்று ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் பாலா மற்றும் குரேஷி தங்களது சேட்டைகளை ஆரம்பிக்க, இனிதே டாஸ்க் முடிந்து போட்டியாளர்கள் தாங்கள் சமைத்த உணவை ருசி பார்க்கும் மேசையின் மீது வைக்கின்றனர்.
அப்பொழுது, உணவை ரசித்த வெங்கடேஷ் பட் 'நீங்க மட்டும் இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு சமைத்திருந்தால், நீங்க தான் டைட்டில் வின்னர்' என்று தெரிவிக்கிறார். அவர் பாராட்டிய இடத்தில் கிராஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன் இருக்கின்றனர். செப் பட் பாராட்டிய இடத்தில் இந்த மூவரில் யார் என்பது தெரியவில்லை. அதற்கான விடை நாளை தெரிந்துவிடும்.
இதையடுத்து, விரைவில் குக் வித் கோமாளி சீசன் 3 முடிவடைய போகிறதோ என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்ப, அதற்கான பதிலைதான் செப் வெங்கடேஷ் பட் சொல்லியுள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்