மேலும் அறிய

Varisu Box Office Collection : ஐந்தே நாட்களில் 150 கோடி வசூலை அள்ளிய ஆட்டநாயகன் விஜய்!

Varisu Box Office Collection : வாரிசு படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில்,  அப்படம் இதுவரை வசூலித்த பணத்தை குறித்து  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது. 

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பார்க்கும் இடமெங்கும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே படம் வெளியாகி ஒருபுறம்  கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், மறுபுறம் விஜய் ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்தான் இப்படத்தின் உயிர் நாடி என்றும், அவர் இல்லையென்றால் படமே ஒன்றுமில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

பொங்கலையொட்டி இப்படம் வெளியானதால், பல மக்கள் தங்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களை கழிக்க சென்றுவருகின்றனர்.இதனால் ஜனவரி 17 ஆம் தேதியான நேற்றுவரை பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறியுள்ளது. தெலுங்கை தவிர பிற மொழிகளில் வாரிசு படம் 11 ஆம் தேதி வெளியான நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி வாரசுடு வெளியானது. வழக்கமாக தெலுங்கு திரையுலக ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு விஜய்க்கும் கொடுக்கப்பட்டது தமிழ் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

View this post on Instagram
 
A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

வாரிசு படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில்,  அப்படம் இதுவரை வசூலித்த பணத்தை குறித்து  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், 5 நாட்களில் உலகமெங்கும் 150 கோடி ரூபாயை வாரிசு வசூலித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜய்யை ஆட்டநாயகன் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வாரிசு படக்குழுவினர்

வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget