100 கோடியை நெருங்கும் தலைவன் தலைவி.. அதற்குள் ஓடிடி தேதி அறிவிப்பு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி தேதி வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில், சரவணன், யோகிபாபு காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதியின் 52ஆவது படமாக வெளியாகி தலைவன் தலைவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே வரவேற்பை பெற்ற இப்படம் 19 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக பாக்ஸ் ஆஃபிசிலும் நல்ல நம்பரை கொடுத்திருக்கிறது.
கணவன் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டை, காதல், அன்பு, கோபம் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி - திவ்யா மேனன் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சந்தோஷ் நாராயணன் இசையும் இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற பொட்டல முட்டையே பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், குறிப்பாக கணவன், மனைவிமார்களை கவர்ந்த படமாகவும் மாறியுள்ளது.
இதுவரை தலவைன் தலைவி திரைப்படம் 90 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வரவேற்பு பெற்ற நிலையில், தெலுங்கிலும் சார் மேடம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிப்படமாகவும் மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதியின் சினிமா கரியரில் மகாராஜா படத்திற்கு பிறகு 100 கோடி வசூல் ஈட்டும் இரண்டாவது படமாகவும் உள்ளது. இந்நிலையில், தலைவன் தலைவி படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















