Vijay Next Movie: வீர சிம்ஹா ரெட்டி இயக்குநருடன் தளபதி 67? டோலிவுட்டை மீண்டும் குறிவைக்கும் விஜய்?
Actor Vijay Next Movie: தளபதி 68 படத்துக்காக விஜய் தற்போது கோபிசந்த் மலினேனி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘வீர சிம்மா ரெட்டி’ இயக்குநருடன் நடிகர் விஜய் அடுத்த படத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தளபதி 68 அப்டேட்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்து, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், முழுவீச்சில் படப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 68 பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
வீர சிம்ஹா ரெட்டி இயக்குநர்
அதன்படி வாரிசு படத்தில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி உடன் முன்னதாக விஜய் கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து, மற்றொரு பிரபல தெலுங்கு பட இயக்குநரான கோபிசந்த் மலினேனி உடன் விஜய் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் சங்கராந்தி ஸ்பெஷலாக பாலகிருஷ்ணா, ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் வீர சிம்ஹா ரெட்டி. இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநர் கோபிசந்த் மலினேனி. இதற்கு முன்னதாக தெலுங்கில் பாடிகாட், வின்னர், க்ராக் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் கதை
இந்நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்துக்காக நடிகர் விஜய் தற்போது கோபிசந்த் மலினேனி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கோபிசந்த் விஜய்யிடம் ஒரு அட்டகாசமான ஆக்ஷன் எண்டெர்டெய்னர் கதையை சொன்னதாகவும், விஜய் இந்தக் கதையைக் கேட்டு ஓகே சொல்லியுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் விஜய் கதை கேட்டு கிட்டத்தட்ட அடுத்த படத்துக்காக இயக்குநர் கோபிசந்தை உறுதி செய்துவிட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் தெலுங்கு வட்டாரத்தைக் குறிவைத்து விஜய் இந்தப் படத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
முழுவீச்சில் லியோ பட ஷூட்டிங்
முன்னதாக லியோ படம் குறித்து தனியார் ஊடக விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “லியோ சிறப்பான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும். 60 நாள்கள் முடிஞ்சது, இன்னும் 60 நாள்கள் ஷூட்டிங் இருக்கு” எனத் தெரிவித்தார்.
விஜய், த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர் , பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.